தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு.. கரூர் சம்பவம் எதிரொலியாக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படுவதாக தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கூடிய நிலையில் பின்​னால் இருப்​பவர்​கள் நெருங்​கியடித்தபடி பிரச்​சா​ரப் பேருந்தை நோக்கி வந்​தனர். இதனால் முன்​னால் காத்திருந்​தவர்​கள் கடுமையான கூட்ட நெரிசலில் சிக்​கினர்.

Shops Across Tamil Nadu to Remain Closed Tomorrow in Tribute to Karur Stampede Victims

விஜய் பேசிக் கொண்​டிருந்​த​போதே மூச்​சுத் திணறி பலர் அடுத்​தடுத்து மயங்கி விழத் தொடங்​கினர். மேலும், அப்​பகு​தி​யில் இருந்த மரக்​கிளை உடைந்து விழுந்​த​தி​லும் சிலர் காயமடைந்​தனர். விஜய் பிரச்​சாரத்தை முடித்து கிளம்​பிய பின்​னரே அவர்​களை மீட்க முடிந்​தது. கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின், கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூருக்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கரூர் துயரச் சம்பவத்தையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கடையடைப்பை அறிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.

கரூர் பிரசாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை (செப்டம்பர் 29) மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் எனவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மருந்துக் கடைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+