சென்னையில் பரபரப்பு! வக்கீல் வீடு மீது துப்பாக்கிச்சூடு? போலீசார் தீவிர விசாரணை!
சென்னை: தாம்பரம் முடிச்சூர் பகுதியில் வழக்கறிஞர் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை துளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டிற்குள் மர்ம நபர் யாரோ துப்பாக்கிச்சூடு நடத்தினரா? என்பது குறித்தும் எப்படி துப்பாக்கி குண்டு வந்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் மீனம்மாள் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தியாகராஜன். இந்த நிலையில் இவரது வீட்டில் திடீரென ஒரு சத்தம் கேட்டது. அப்போது வீட்டில் இருந்த தியாகராஜன் மனைவி பிரியா ஓடிச்சென்று பார்த்தார். அப்போது வீட்டின் வரவேற்பு அறை கண்ணாடியை துளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டுக்குள் விழுந்து கிடந்தது.

துப்பாக்கி குண்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி குண்டை ஆய்வு செய்து பார்த்தனர். இதில், அது சிறிய ரக துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு என்று தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார், வழக்கறிஞர் என்பதால், அவருக்கு வழக்கு தொடர்பாக எதிரிகள் யாரும் மிரட்டல் விடுப்பதற்காக இப்படி செய்துள்ளனரா? இல்லை கை தவறி அங்கு குண்டு வந்ததா என்பது குறித்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தடயவியல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, போலீசார் வழக்கறிஞர் தியாகராஜனின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் வெளியே பார்த்த போது, தெருவில் இருந்து மர்ம நபர் ஒருவர் மெயின் ரோடு நோக்கி வேகமாக சென்றதாக அவரது மனைவி பிரியா தெரிவித்தார். இதன் காரணமாக மர்ம நபர் யாரோ, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications