பாஜகவை எதிர்த்து விட்டு திமுக கொண்டு வருவதா? 12 மணி நேர வேலை ஏற்க முடியாது.. சிபிஎம் கடும் கண்டனம்
சென்னை:
150 ஆண்டுகாலம் போராடி, பலர் உயிர்துறந்து குடும்பத்தை இழந்து சிறைக்குச்சென்று பெற்ற உரிமைகளை எந்த காரணத்திற்காகவும் இழக்க முடியாது, இழக்கக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே இந்த மசோதாவை பாஜக அல்லாத ஒரு மாநில அரசு கொண்டு வந்திருப்பது தமிழ்நாடு அரசுதான் தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசேதாவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டுமென அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என திமுக தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டசபை தொழிலாளர்களின் வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது. இந்த மசோதாவை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை தமிழ்நாடு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மை என்ற ஒன்றைச்சொல்லி அதை இல்லாமல் செய்வது தவறான நடவடிக்கை, தவறான முன்னுதாரணம்; மாற்ற முடியாத பழிச்சொல்லுக்கு அரசு ஆளாக நேரிடும். பாஜக ஏற்கனவே கொண்டு வந்துள்ளதை அனைவரும் எதிர்த்துள்ளோம். இந்தியாவிலேயே இந்த மசோதாவை பாஜக அல்லாத ஒரு மாநில அரசு கொண்டு வந்திருப்பது தமிழ்நாடு அரசுதான்
2019ம் ஆண்டு தேசிய புள்ளியியல் துறை இந்தியாவில் நேரப்பயன்பாடு குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் இந்திய நகர்ப்புற உழைப்பாளர்கள் வாரத்திற்கு 60 மணி நேரம், 47 நிமிடங்களும் நேரடியாக வேலை மற்றும் வேலைத்தொடர்பான காரணங்களுக்கான செலவிடுகிறார்கள் என்று சொல்லியிருக்கிறது. எட்டுமணிநேர வேலை சட்டப்படியாக இருக்கும்பொழுதே இந்த நிலைமை என்றால் அரசு சொல்கிற நெகிழ்வுத்தன்மை வந்துவிட்டால் என்ன நிலைமை ஏற்படும் என்பது விளங்கும்.
அதிக அளவு தொழிலாளர்கள் வேலைவாங்கப்படும் நாடுகளில் காம்பியா, மங்கோலியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மட்டும்தான் இந்தியாவிற்கு பின்னே இருப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருக்கிறது. 2020ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு வேலைநேரத்தை அதிகரிக்க முயற்சித்தபோது அதை திமுக கடுமையாக எதிர்த்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
மத்திய அரசும் இந்த முயற்சிக்கு எதிராக திமுக, பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் எட்டுமணி நேர வேலை நேரத்தை பன்னிரெண்டு மணி நேரமாக உயர்த்தியதற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தையும் தெரிவித்தது.
நிலைமை இப்படி இருக்கையில், நெகிழ்வுத்தன்மை என்பது தொழிலாளியை ஒட்டச்சுரண்டவும், முதலாளிகளுக்கு உறிஞ்சி கொடுக்கவுமே வழிவகுக்கும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் வேலை நேரம் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். டாக்டர் கலைஞர் கூட இந்த கருத்தை கடந்த காலத்தில் முன்வைத்திருக்கிறார். தொழிலாளர் நலனுக்கு முரணாகவும் சட்ட நியாயங்களுக்கு புறம்பாகவும் இந்த சட்டத் திருத்தம் இருக்கிறது.
தேவைப்படும் காலங்களில் தொழிற்சாலை ஆய்வாளரிடம் அனுமதி பெற்று நெகிழ்ச்சியான வேலைநேரத்தை பெறுவதற்கு வாய்ப்பிருந்தும் வேலைநேரம் குறித்த எந்த சட்டத்திற்கும் மதிப்பளிக்கவேண்டியதில்லை என்பதற்கான ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்திருப்பது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சட்டங்களே தேவையில்லை என்பதற்காக சட்டம் இயற்றுவதாகும்.
தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசேதாவை கைவிடுவதாக அறிவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறது.
இது 150 ஆண்டுகாலம் போராடி, பலர் உயிர்துறந்து, பலர் வேலை இழந்து, குடும்பத்தை இழந்து சிறைக்குச்சென்று பெற்ற உரிமைகளை எந்த காரணத்திற்காகவும் இழக்க முடியாது, இழக்கக்கூடாது. எனவே, இந்த மசோதா சட்டமாகாமல் கைவிடப்பட வேண்டும் என்கிற கோரிக்கையோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக தொடர்ச்சியாக போராடும். அனைத்து ஜனநாயக சக்திகளும் தங்களால் இயன்ற அனைத்து வகைகளிலும் போராடுவதோடு ஒன்றுபட்ட போராட்டத்திற்கும் வெற்றிபெறும் வரை போராடுவதற்கும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications