கிரிமினல்.. போலீசுக்கு போகும் அண்ணாமலைக்கு எதிரான எவிடென்ஸ்! காயத்ரி என்ன இப்படி சொல்றாங்களே? அதுவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக டெல்லி பாஜக தலைவர்கள் அல்லது போலீசுக்கு புகார் அளிக்க போவதாகவும், இதற்கான எவிடென்ஸை தர தயாராக இருப்பதாகவும் காயத்ரி ரகுராம் தெரிவித்து இருக்கிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு பாஜகவில் இருந்து வெளியேறி இருக்கிறார் காயத்ரி ரகுராம். அண்ணாமலையின் ஒரே குறிக்கோள் உண்மையான தொண்டர்களை வெளியே அனுப்புவதுதான். பாஜகவிற்கு வாழ்த்துக்கள். நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.

கடந்த 8 வருடங்களாக என்னுடன் வேலை பார்த்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி. அவர்கள் என்னுடன் அன்பாக இருந்தனர். எனக்கு மரியாதை கொடுத்தனர். அது ஒரு சிறந்த பயணம். என்று கூறிவிட்டு கட்சியில் இருந்து காயத்ரி வெளியேறி உள்ளார்.

நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

இந்த நிலையில், பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த கட்சியின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி, கட்சிக்கு ஒழுக்கம்தான் முக்கியம். ஒழுக்கமாக இருக்க வேண்டும். கட்சி ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் காயத்ரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருக்கிறோம், என்று தெரிவித்தார். இதற்கு காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், சார் என்னுடைய கேள்வி எளிமையானது.. நீங்கள் என்னுடைய ஒழுக்கத்தை பற்றி பேசுவதற்கு முன்னர் சில விஷயங்களை ஆராய வேண்டும்.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

ஒருவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யும் முன் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் தானே? அல்லது அவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும் தானே? நான் டெல்லியில் என்ன நடந்தது என்று ஆதாரங்களை சமர்ப்பிக்கட்டுமா? நான் போலீசில் ஆதாரங்களை சமர்ப்பிக்கட்டுமா? நான் ஆதாரங்களை சமர்ப்பித்தால் அண்ணாமலைக்கு எதிராக என்ன ஆக்சன் எடுப்பீர்கள்? சொல்லுங்கள்.

பாஜக நீக்கம்

பாஜக நீக்கம்

நான் பாஜகவில் இருந்து வெளியேற காரணங்கள் இருக்கின்றன. என்னால் அண்ணாமலையை எதிர்க்க முடியாது. அவர் சொந்த கட்சி உறுப்பினரை விமர்சனம் செய்கிறார். அவர்களுக்கு பெண்களின் பாதுகாப்பை விட கட்சி ஒழுக்கம்தான் முக்கியம். அதனால் அவர்கள் என் மீதுதான் புகார் வைப்பார்கள். நான் இங்கே நீதி கேட்டு வந்து இருக்கிறேன். நான் பாஜகவிற்கு எதிரானவள் இல்லை. நான் பாஜகவின் சமூக வலைதள குழுவிற்கு எதிரானவள் இல்லை. ஆனால் அண்ணாமலையின் தனிப்பட்ட வார் ரூமிற்கு எதிரானவள் நான்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அவர் எவ்வளவு கிரிமினல் ஆக முடியும்.. எவ்வளவு வனமமானவர் ஆக முடியும் என்பது எனக்கு தெரியும். நான் அவரால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். நான் என்னால் முடிந்த வரை மிக சிறப்பாக சண்டை செய்வேன். வீடியோ, ஆடியோ விவகாரம், பெண்களின் பாதுகாப்பு பற்றிய பிரச்சனை, என்னுடைய கேரக்டரை தவறாக பேசியது போன்ற காரணங்களால் அண்ணாமலையை நான் எதிர்க்கிறேன். எனக்கும் அவருக்கும்தான் சண்டை. எனக்கும் பாஜகவின் தொண்டர்களுக்கும், பாஜக நிர்வாகிகளுக்கும் எந்த சண்டையும் இல்லை. நான் பல வருடமாக பாஜகவில் இருக்கிறேன். ஆனால் அண்ணாமலை என்னை திமுக நிர்வாகி என்கிறார்.

கிரிமினல்

கிரிமினல்

திமுகவிற்கு ஆதரவாக நான் எப்போதும் இருந்தது இல்லை. அவர்களுக்கு எதிராக நான் போராடி வருகிறேன். அண்ணாமலையால் நான் திமுகவின் ஸ்லீப்பர் என்று நிரூபிக்க முடியுமா? கடவுள் அவரின் பொய்களுக்கு தண்டனை கொடுப்பார். டெல்லி பாஜகவை அண்ணாமலை ஏமாற்றுகிறார். தமிழ்நாட்டில் பாஜக வளர்வதாக கூறி அண்ணாமலை ஏமாற்றி வருகிறது. சமீபத்தில் நடந்த நீலகிரி கூட்டம் அதற்கு உதாரணம். தருமபுரி கூட்டத்திற்கும் மக்கள் கூட்டம் வரவே இல்லை. அண்ணாமலையால் கூட்டத்தை கூட சேர்க்க முடியவில்லை. அவர் டெல்லிக்கு பொய்யான ரிப்போர்ட்களை அனுப்பி வருகிறார்

திமுக ஆதரவு

திமுக ஆதரவு

உண்மையை பேசும் நபர்களை, கட்சிக்காக உழைக்கும் நபர்களை, அவரை கேள்வி கேட்கும் நபர்களை அண்ணாமலை வெளியே அனுப்புகிறார். அண்ணாமலை பாஜக வளர்ந்துவிட்டதாக பொய் சொல்கிறார். அவரால் சொல்ல முடிந்த பொய்களை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். கட்சியை அவர் சேதப்படுத்தி வருகிறார். அதனால்தான் நான் கட்சியை விட்டு வெளியேறினேன். தற்போது சவுக்கை வைத்து நான் திமுக கைக்கூலி என்று பிரச்சாரம் செய்கிறார். அண்ணாமலையால் வாங்கப்பட்டவர்கள் அவரின் சுயரூபத்தை புரிந்து கொள்வார்கள். பாஜக தலைவருக்கு எதிராக போலீசில் எவிடென்ஸ் கொடுக்க போவதாக காயத்ரி கூறி உள்ளார். அது என்ன எவிடென்ஸ்.. ஹனி டிராப் தொடர்பானதா அல்லது வேறு விவகாரங்கள் தொடர்பானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+