2016 லேயே இது நடந்திருக்கனும்.. திமுக கூட்டணி 200 வெல்லுமா? விஜய பிரபாகரன் எமோஷனல் பதில்
சென்னை: விஜய பிரபாகரன் நேற்றைய தினம் வெளியிட்டிருந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிகளில் அதாவது 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெறும். விருதுநகரில் நான் வெற்றி பெறுவது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து இங்கே விவரமாக பார்ப்போம்.
2026 சட்டமன்றத் தேர்தல் நடந்த முடிந்துள்ள சூழலில், அரசியல் களம் அதே பரபரப்புடன் இன்னமும் உள்ளது.. விருதுநகர் தொகுதியின் தேமுதிக வேட்பாளரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான விஜய பிரபாகரன், இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மெகா வெற்றி
செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன், திமுக கூட்டணியின் பலம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அவர் மிக உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மத்தியில் நிலவும் ஆதரவு அலை மற்றும் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவை இந்த மெகா வெற்றிக்குச் சாதகமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேமுதிகவின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கூட்டணி குறித்துப் பேசிய விஜய பிரபாகரன், தற்போதைய சூழலில் திமுக கூட்டணியுடன் இணைந்து செயல்படுவதில் தங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதாகவும், தற்போது தரைமட்டத்தில் தொண்டர்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜய பிரபாகரன் நம்பிக்கை
"நாங்கள் சொன்ன சொல்லில் இருந்து பின்வாங்க மாட்டோம். இந்தத் தேர்தல் வெற்றிக்காகக் களத்தில் முழு வீச்சில் பணியாற்றி வருகிறோம்.. இதுபோன்ற ஒரு வலுவான கூட்டணி ஒற்றுமை 2016-லேயே அமைந்திருக்க வேண்டும். அப்போது அமையாத அந்த ஒற்றுமை தற்போது சாத்தியமாகி உள்ளது. இதன் மூலம் தனது தந்தையின் நீண்ட கால அரசியல் கனவு மற்றும் தொலைநோக்குப் பார்வை நனவாகும் .
தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலைத்தன்மைக்குக் கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையே பிரதானம்.. தேர்தல் களத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
திமுக & தேமுதிக கூட்டணி
ஏற்கனவே 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதே இலக்கு என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், விஜய பிரபாகரனின் இந்தப் பேச்சு அந்த இலக்கை வழிமொழிவது போல் அமைந்துள்ளது. குறிப்பாக, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய பிரபாகரனின் பெயருக்குக் கிடைக்கும் வரவேற்பு மற்றும் மக்கள் ஆதரவு குறித்து திமுக தரப்பிலிருந்தும் சாதகமான கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் புதிய அரசியல் கட்சிகளின் வருகைக்கு மத்தியிலும், திமுக தலைமையிலான கூட்டணி தனது பலத்தை நிலைநிறுத்தும் என்பதில் விஜய பிரபாகரன் காட்டும் உறுதி, 2026 தேர்தல் களம் அதே அனலில் உள்ளதை உறுதிப்படுத்துகிறது... எனினும் வாக்கு எண்ணிக்கையின்போதுதான் களத்தின் உண்மையான வெற்றி யாருக்கு என்பது தெரியவரும்.
-
திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன? -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications