"தவெகவுடன் கூட்டணி வைக்கணும்".. அழுத்தம் கொடுத்த சிவி சண்முகம்.. எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த ரியாக்சன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று எடப்பாடி பழனிசாமியை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தனர். இந்த சமயத்தில் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக சிவி சண்முகம் தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்சன் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ளன. இதனால் அதில் பாதி 118 எம்எல்ஏக்கள் இருந்தால் மட்டும் தான் ஒரு கட்சியால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு 10 எம்எல்ஏக்கள் குறைவாக உள்ளது.

should-voluntary-support-to-tvk-why-edappadi-palaniswami-unwilling-after-c-ve-shanmugam-put-pressur

மெஜாரிட்டியை பெறும் வகையில் விஜய் பிற கட்சிகளின் ஆதரவை பெற்று வருகிறார். முதற்கட்டமாக, திமுக கூட்டணியை முறித்து காங்கிரஸ் கட்சியின், தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளன. இதனால் தவெகவின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும்.

தவெக கூட்டணியை விரும்பும் அதிமுகவினர்

இதற்கிடையே தான் தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக மொத்தம் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் பாஜக, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. இதற்கிடையே தான் அதிமுகவில் ஒரு தரப்பினர் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தான் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏக்கள் இன்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்தனர்.

சிவி சண்முகம் - எடப்பாடி பழனிச்சாமி

இந்த வேளையில், அதிமுக மூத்த தலைவர்களான முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதை மையமாக வைத்து இந்த ஆலோசனை நடந்தது. அப்போது சிவி சண்முகம், ''தானாக முன்வந்து நாம் விஜய்யின் தவெகவிற்கு ஆதரவு வழங்க வேண்டும்'' என்று கட்டாயப்படுத்தி உள்ளார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி, தவெகவிற்கான ஆதரவு நிலைப்பாடு எடுக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.

பின்னணி என்ன?

அதுமட்டுமின்றி இன்னொரு தகவலும் வெளியாகி வருகிறது. அதாவது தவெக ஜெமாரிட்டிக்கு போராடி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் விஜய் ஆதரவு கோரியுள்ளார். அதேபோல் திமுக கூட்டணிக் கட்சிகளான 2 கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிகவிற்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆனால் தற்போது வரை அதிமுகவை நாடவில்லை. இதனால் தவெகவிற்கு ஆதரவு வழங்குவது என்பது இறங்கி செல்வது போல் இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். அதுமட்டுமின்றி தவெக இறங்கிவந்து ஆதரவு கேட்டால் அதுபற்றி பரிசீலனை செய்து முடிவெடுக்கும் முடிவில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடரும் ஆலோசனை

இதனை தான் இன்று காலையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனும் உறுதி செய்தார். இதுபற்றி அவர், ''தற்போது பந்து தவெகவின் கோட்டில் உள்ளது. தவெகவினர் இறங்கி வந்தால் ஆதரவு பற்றி மேலிடம் பரிசீலனை செய்யலாம். இன்று மாலை வரை காத்திருங்கள்'' என்றார்.

இந்நிலையில் தான் அதிமுகவின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+