புயலை கிளப்பிய "புயல்".. வறண்ட சென்னை? தண்ணி எங்கே? வேற பிரதமரை தேர்ந்தெடுக்க போறேன்.. யார் பாருங்க
சென்னை: காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள பதிவானது, மீண்டும் பாஜகவை கடுப்பாக்கி உள்ளது.. இது தொடர்பான கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீதான காழ்ப்புணர்ச்சியை, தன்னுடைய ட்வீட்டில் தொடர்ந்து பதிவிட்டு வருபவர் காயத்ரி ரகுராம்.. பிரதமர் மோடி குறித்து, இவர் சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ஒரு சேனலுக்கு காயத்ரி பேட்டி தந்தபோது, "வரும் தேர்தலில், 50 சதவிகிதம்தான் பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கிறது. மிச்சம் 50 சதவிகித வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்வேன். வடக்கும் தெற்கும் ஒன்று கிடையாது.. பழக்க வழக்கங்கள், கலாசாரங்கள் எல்லாமே வேறு மாதிரியாக இருக்கின்றன.
சமத்துவ பாதை: தெற்கு பேசும் சமத்துவ பாதையை வடக்கு புரிந்துகொள்கிறதா என்றே தெரியவில்லை" என்று பதிலளித்திருந்தார். அத்துடன், அண்ணாமலை தலைமையில், தமிழக பாஜக ஒரு இன்ச்கூட வளரவேயில்லை என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமல்ல, கடந்த வாரம் 5 மாநில தேர்தல் குறித்தும் காயத்ரி கருத்து கூறியிருந்தார்.. அதில், காங்கிரஸ் ஒருபோதும் இந்துக்களுக்கு எதிராகவோ, சனாதன தர்மத்தைப் பற்றியோ வெறுப்பை பரப்புவதில்லை. சமத்துவமின்மை மற்றும் சமூக நீதி அல்லாத குழுக்களை ஒழிக்க சில பழைய சித்தாந்தம் சக்திகள் பற்றி திமுக பேசியது. அவ்வளவுதான்" என்று பதிவிட்டிருந்தார்.

தண்ணீர் வடியவில்லை: இந்நிலையில், சென்னையை புயல் உலுக்கிவிட்டு போயுள்ளது. மழை விட்டாலும் இன்னும் தண்ணீர் வடியவில்லை.. பெரும்பாலான குடியிருப்புகளில் வெள்ளநீர் இன்னும் சூழ்ந்தவாறே உள்ளது.. மீட்பு பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன..
முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவருமே மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை செய்து வருகிறார்கள்.. இதைத்தவிர, வெளி மாவட்டத்தில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்... எனினும், பல்வேறு ஏரியாவில், படகு போக்குவரத்துதான் இன்னமும் தொடர்கிறது.

திருவள்ளூர்: இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு செய்தார். இது தொடர்பாக, அந்த போட்டோக்களையும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...

ஆனால், பதிவிட்டுள்ள போட்டோக்களில், வெள்ளத்தால் சூழப்பட்ட போட்டோ ஒன்றுகூட இல்லை.. சென்னையில் வறண்ட நிலங்கள் போலவே அந்த போட்டோக்கள் பதிவிடப்பட்டிருந்தது. இதைப்பார்த்த பலரும் அதிர்ச்சியானார்கள்.. தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் பார்வையிட்ட வீடியோவை நடிகை காயத்ரி ரகுராம் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்..
இந்த நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் தன்னுடைய எக்ஸ் தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பார்வையிட்ட வீடியோவையும் பதிவிட்டிருள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.
வறண்ட நிலம்: "மாண்புமிகு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜிக்கு யாராவது டிசம்பர் 5 உண்மையான சென்னை காட்சிகளைக் காட்ட முடியுமா? இந்த பார்வையில் நிலம் வறண்டு காணப்படுகிறது. 3 மாநில தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்காக மோடி கடந்த 2 நாட்களாக பிஸியாக இருப்பதால் தமிழகத்திற்கு அமைச்சரை அனுப்பி வைத்தார். எனவே, 2024 தேர்தல் வரும் போது, நானும் வேறு பிரதமரை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருப்பேன். வந்தே மாதரம்" என்று பதிவிட்டுள்ளார்.
"என்னுடைய ஒரே தலைவர் பிதாமகன் மதிப்பிற்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி" என்று இத்தனை காலமும் புகழாரம் சூட்டிவந்த காயத்ரி ரகுராம் பேச்சில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்???












Click it and Unblock the Notifications