மக்களே கவனம்! சென்னையில் இங்கெல்லாம் நாள் முழுக்க மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை: தலைநகர் சென்னையில் தாம்பரம் மற்றும் தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் அறிவிக்கப்பட்ட மின் தடை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்தடை என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருந்தது. தினசரி குறைந்தது சில மணி நேரமாவது அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இருக்கும் என்ற சூழலே இருந்தது.

ஆனால், இப்போது தமிழ்நாட்டில் நிலைமை மாறிவிட்டது. மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு இப்போது மின்மிகை மாநிலமாகவே மாறிவிட்டது.
குறிப்பாக தமிழ்நாடு இப்போது மற்ற மாநிலங்களுக்குக் கூட மின்சாரம் சப்ளை செய்வதாகவே மின்சார துறை அமைச்சரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதனால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அல்லது மின் பற்றாக்குறையால் ஏற்படும் மின்வெட்டு என்பது இல்லை. இப்போது இங்கே பெரும்பாலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மட்டுமே மின்வெட்டு இருக்கிறது.
அதன்படி நாளைய தினம் தாம்பரம் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் மின் தடை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியாக்களில் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 14) மின்சாரம் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த இடங்களில் எல்லாம் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தாம்பரத்தை பொருத்தவரை பல்லாவரம் கோவளம் தெரு, கோவிலம்பாக்கம், அதியமான் தெரு, சுபம் நகர், காமாட்சி நகர் வடக்குப்பட்டு பிரதான சாலை, பெல் நகர், அண்ணாமலை நகர், ராதா நகர் ஜிஎஸ்டி சாலை, பாலாஜி பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தண்டையார்பேட்டையில் காலடிப்பேட்டை டிஎச் சாலை, ராஜாக்கடை, திருச்சினாங்குப்பம், எல்லையம்மன் கோவில் தெரு, எண்ணூர் விரைவு சாலை, திலகர் நகர், பிகேஎன் காலனி, குமரன் நகர், பிபிடி சாலை அத்திப்பட்டு காட்டுப்பள்ளி, சேப்பாக்கம், தமிழ் கொரஞ்சூர், கே.ஆர். பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
இந்த பகுதிகளில் எல்லாம் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த இடங்களில் எல்லாம் மின்சாரம் இருக்காது. ஒரு வேளை 2 மணிக்கு முன்பே பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தால் மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications