No Advise.. மக்கள் தெளிவா இருக்காங்க.. அவர்கள் தீர்ப்பே இறுதி! – தி.நகரில் வாக்களித்த நடிகர் சிம்பு
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் சிம்பு தியாகராயநகர் தொகுதியில் தனது ஜனநாயக கடைமையை ஆற்றினார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குச் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்தமுறை 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் போட்டியிட்டுள்ளனர். கடந்த முறையை விட இந்த முறை அதிகளவிலான வாக்குகள் பதிவாகி வருகின்றன. மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

வாக்களித்த சிம்பு
இன்று காலை 7 மணி முதலே நடிகர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய அரசியல் கட்சியினர் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தியாகராயநகர் வாக்குச்சாவடியில் நடிகர் சிம்பு ஜனநாயக கடமையை ஆற்றினார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் சிம்பு கூறியதாவது: காலையிலேயே எல்லாம் தங்களது வாக்கினை அளிக்க வேண்டும் என்று ட்வீட் போட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்த ஆண்டு நடைபெறும் தேர்தல் வித்தியாசமான தேர்தலாக உள்ளது. எல்லா தரப்பினரிடமும் வாக்களிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனையே நான் நல்ல மாற்றமாகப் பார்க்கிறேன்.
மக்கள் முடிவு
மாற்றம் வேண்டுமா என்பதை நாம் முடிவு செய்ய முடியாது. மாற்றம் குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எல்லா கட்சியிலும் எனக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அதனால், பயாஸ்டாக ஒரு விஷயத்தை சொல்ல முடியாது. அவரவர் கடமை, அவர்களுக்குப் பிடித்தவர்களுக்கு ஓட்டு போடப் போகிறார்கள்.
இந்த முறை மக்களிடம் ஓட்டு போட்டே ஆக வேண்டும் என்கிற அபரிமிதமான ஆர்வத்தைப் பார்க்க முடிகிறது. அதனால், காத்திருந்து பார்ப்போம். எந்தக் கட்சிக்காகவும் நம்மால் பேச முடியாது என்றார். நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள் என்ற கேள்விக்கு, ஏம்மா நான் நல்லா இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா. இப்போதுதான் என் பிரச்சனை எல்லாம் தீர்த்து நன்றாக நடிக்கலாம் என்று இருக்கிறேன். அதை கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே என்று கூறி சிரித்தார்.
இளைஞர்கள் ஆர்வம்
முன்பெல்லாம் இளைஞர் வாக்களிக்க பெரிதும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இந்தமுறை எல்லோரும் ஆர்வத்துடன் வருவதை நல்ல அறிகுறியாகப் பார்க்கிறேன். சிந்தித்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறி ஆலோசனை கொடுக்குமளவுக்கு மக்கள் இல்லை. பொதுமக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். அவர்கள் அறிவார்ந்தவர்களாக இருக்கின்றனர். தெளிவான நல்ல முடிவை எடுப்பார்கள்.
எந்த துறையில் இருந்து யார் வந்தாலும் விமர்சனம் செய்து கொண்டு தான் இருப்பார்கள். நாம் இந்த இடத்துக்கு வந்துவிட்டால் விமர்சனம் என்பதை தாங்கித்தான் வாங்க வேண்டும் என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications