Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கப்பூரா? இது வில்லிவாக்கமா? ஆகாயத்தில் மிதக்கும் கண்ணாடி பாலம்! வேற லெவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வில்லிவாக்கம் ஏரியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடிப் பாலம் சென்னையின் புதிய அடையாளமாக விரைவில் மாற இருக்கிறது. சிங்கப்பூரைப் போல இந்த இடமே புதிய தோற்றத்தையும் பொலிவையும் பெற்றுள்ளது.

இன்று சென்னையின் பிறந்த நாளைப் பலரும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த பிரிட்டிஷ் காலத்து நகரத்திற்கு 385 வயதாகிறது. டச்சுக்காரர்கள் முதல் பிரிட்டிஷ்காரர்கள் வரை இந்த நகரம் பல ஆட்சியாளர்களைப் பார்த்திருக்கிறது. ஆரம்பக்காலத்தில் சென்னை என்றால் மதராசபட்டினம். அதன்பின்னர் சென்னைப்பட்டினம். வடநாட்டுக்காரர்கள் பார்வையில் இது மதராஸ். அப்புறம் மெட்ராஸ். இப்படி எத்தனை பெயர்கள்? பாம்பு தன் சட்டையை உரித்துக் கொண்டு தன்னை புதுப்பித்துக் கொள்வதைப் போல, இந்த மாநகரம் தினந்தோறும் மாறிக் கொண்டே இருக்கிறது.

Chennai Villivakkam

பிரிட்டிஷ் கால ஆட்சியில் சென்னையின் அடையாளமாக இருந்தது செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ஸ்பென்சர் பிளாசா. உலக அளவில் இதன் அடையாளம் மெரினா. 1960களில் மெட்ராஸ் என்றால் அது எல்.ஐ.சி கட்டடத்தைக் குறிக்கும். ஜெமினி ஸ்டுடியோவை குறிக்கும். பிறகு 1980களில் இந்தப் பகுதியின் அடையாளமாக அண்ணா மேம்பாலம் மாறியது. இன்றைக்குச் சென்னை என்றால் எக்கச்சக்க அடையாளங்கள் உள்ளன. வள்ளுவர் கோட்டம் தொடங்கி டைடல் பார்க் வரை பல அடையாளங்கள் உள்ளன.

அந்தக் காலத்தில் மெட்ராஸ் யுனிவர்சிடி, பிரசிடென்சி காலேஜ், பச்சையப்பன் கல்லூரி இவைதான் அடையாளம். அந்தக் காலத்தில் ட்ராம் மக்களுக்கு அதிசய பொருளாக இருந்தது. இன்று ட்ராம் ஓடிய சாலைக்குக் கீழே பூமியில் மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. எத்தனை விஞ்ஞான வளர்ச்சிகள் வந்து சேர்ந்துள்ளன.

இந்த வரிசையில் சென்னையின் புதிய அடையாளமாக மாறி இருக்கிறது வில்லிவாக்கம் ஏரியின் தொங்கும் கண்ணாடிப் பாலம். இந்தப் பாலம் மொத்தம் 250 மீட்டர் தூரத்தில் நீளமாக தொங்குகின்றது. இதற்கு 37 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தகவல் மூலம் அறிய முடிகிறது. கடந்த 50 ஆண்டுகள் அண்ணா நகர் டவர் மக்களை மயக்கியது. இன்றைக்கு வில்லிவாக்கம் கண்ணாடிப் பாலம் கண்களைக் கவர்கிறது. இந்தப் பாலத்தில் வேலைகள் 70% நிறைவடைந்துவிட்டன. இன்னும் சில மாதங்களில் இது மக்களின் பயன்பாட்டுக்கு வரப் போகிறது.

இந்த ஏரியானது மொத்தம் 36.34 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாநகராட்சி சார்பில் மிக அழகாக தூர் வாரப்பட்டு பசுமையாகக் காட்சி அளிக்கின்றது. இங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் அவ்வளவு தூய்மையாக மாற்றப்பட்டுள்ளன. இங்கே அழகாக மக்கள் இயற்கையோடு இணைந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. லண்டன் நகரத்தில் உள்ளதைப் போல ஏரியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி தொங்கு பாலத்தின் வழியே ஆகாய நடை போட்டு பொதுமக்கள் ரசிக்கலாம். மேலே இருந்தபடி இந்த ஏரியாவை ஒரு பருந்து பார்வையில் பார்த்து வியக்கலாம்.

Chennai Villivakkam

மேலும் ஏரியில் படகு சவாரியைச் செய்வதற்காகப் படகுகள் அமைக்கப்பட்டுள்ளன. நடந்து பார்த்து அசதியானவர்கள் இந்தப் படகில் பறந்து பார்த்து சந்தோஷம் அடையலாம். கூடவே ஸ்கேட்டிங், சைக்கிளிங் என விளையாடத் தனி பாதையும் தரப்பட்டுள்ளது. ஏரியின் கரையில் சிறுவர்கள் கேம் விளையாடுவதற்காக ஒரு தனி கட்டடம் கட்டி முடிக்கப்பட உள்ளது. அங்கே அன்லிமிட்டெட் அட்வான்ஸ் விளையாட்டு சாதனங்களை அரசு அமைக்க உள்ளது. அதன் உள்ளாகவே உணவகங்கள் வர உள்ளன.

சிங்கப்பூரை முன்மாதிரியாகக் கொண்டு இந்த ஏரி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கே திறந்தவெளி தியேட்டர் ஒன்றும் கட்டப்பட்டு வருகின்றது. இங்கே இரும்பு கம்பிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஜீப் லைன் பாலத்தில் பயணிப்பதே தனி அனுபவத்தை அளிக்கிறது. கண்ணாடிப் பாதையில் நடக்கும்போது ஏற்படும் ஒரு த்ரில் அனுபவம் தமிழ்நாட்டிற்கே புதியது. ஏரியின் கரையோரங்களில் குளுமையாக ஈச்சை மரங்களின் சாயலில் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும் வாத்து, மீன் போன்ற உயிரினங்கள் ஏரியில் விடப்பட்டுள்ளன. அவற்றை பார்த்துக் கொண்டே நடக்கும் போது மனதில் உண்டாகும் உற்சாகத்திற்கு ஈடு இணையே இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+