சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்!
சென்னை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை குறித்து முக்கிய தகவல்களை காவல் துறை அதிகாரி ஐஜி பவானீஸ்வரி ஐபிஎஸ் வெளியிட்டுள்ளார். இந்தப் படை வழக்குப்பதிவு செய்யவோ, விசாரணை நடத்தவோ போவதில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஐஜி பவானீஸ்வரி, "சிங்கப்பெண் அதிரடிப்படை என்பது முற்றிலும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பு. இதன் முதன்மைப் பணி குற்றங்களை நிகழ்வதற்கு முன்பே தடுப்பதுதான். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் ஒரே நோக்கம்" என்றார்.

இந்தப் படையினர் தனியாக எந்த வழக்கையும் பதிவு செய்ய மாட்டார்கள். களத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்திற்குரிய நபர்களைப் பிடித்தால், அவர்களை உடனடியாக அந்தப் பகுதி சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் அல்லது அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு ஒப்படைப்பார்கள் என்று அவர் விளக்கினார்.
ரோந்து பணிகள் மற்றும் இலக்கு பகுதிகள்:
மாநிலம் முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், பெண்கள் அதிகம் நடமாடும் இடங்கள் ஆகியவற்றில் தீவிர ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தப் படை மூலம் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், பணியிடங்களுக்குச் செல்லவும் உதவும் வகையில் செயல்படுத்தப்படும்.
₹34 கோடி நிதி ஒதுக்கீடு:
இந்தப் படையின் செயல்பாடுகளுக்கு தமிழக அரசு ₹34 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு அதிநவீன நான்கு சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் வாங்கப்பட உள்ளன. குறிப்பாக, போலீஸ் நேரடியாக செல்ல முடியாத ஒதுக்குப்புறப் பகுதிகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
புதிய பணியிடங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை:
சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் 235 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தகுதியான போலீஸ் அதிகாரிகளைத் தேர்வு செய்யும் பணி
விரைவில் தொடங்கும்
தமிழகத்தில் உள்ள 210 காவல் உட்கோட்டங்களின் அடிப்படையில் 210 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 10 சிறப்புப் படைகள் ஏற்கனவே களப்பணியைத் தொடங்கியுள்ளன.
ஆயுதங்கள் பற்றிய விளக்கம்:
தற்போது குற்றத் தடுப்பு மட்டுமே நோக்கம் என்பதால் லத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் ஐஜி தெரிவித்தார்.
அவசர உதவி வசதிகள்:
தற்போது 100 என்ற எண்ணில் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. விரைவில் 'சிங்கப்பெண்' படைக்கென தனி ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்படும். மேலும், 'காவலன் எஸ்.ஓ.எஸ்' மொபைல் ஆப்பில் இந்தப் படையை நேரடியாகத் தொடர்புகொள்ளும் வசதியும் விரைவில் இணைக்கப்படும்.
இந்தப் புதிய முயற்சி தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். குறிப்பாக இரவு நேரப் பயணங்கள், பணி இடங்களில் பாதுகாப்பு, பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான தொல்லைகள் ஆகியவை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சிங்கப்பெண்' அதிரடிப்படை தமிழக காவல் துறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னோடியாகத் திகழும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஐஜி பவானீஸ்வரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications