Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சில்லறை தொல்லை இனியில்லை.. சிங்கார சென்னை அட்டையை எங்கு, எப்படி ரீசார்ஜ் செய்யலாம்? எஸ்பிஐ வங்கி செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஸ்களில் பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், இந்த அட்டையை எப்படி ரீசார்ஜ் செய்யலாம்? எங்கெல்லாம் ரீசார்ஜ் செய்யலாம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்படி, மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இணைந்து வழங்கும் சிங்கார சென்னை பயண அட்டை வாயிலாக பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ள ஏதுவாக, இதனை அமைச்சர் மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் அறிமுகம் செய்து வைத்தார்.

singara chennai card sbi bank recharge

மெட்ரோ ரயில்கள்: பஸ்கள், மெட்ரோ ரயில்கள், மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கு இந்த சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தலாம். மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை கடந்த 2023ல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையை பொதுமக்கள் இனி பயன்படுத்தி பயணிக்கலாம்.

அனைத்து மாநகர பஸ்களிலும் பயன்படுத்தும் வகையில், நவீன டிக்கெட் கருவியும் உபயோகத்தில் உள்ளது... இந்த திட்டத்தில், முதற்கட்டமாக, 50,000 அட்டைகள், எஸ்பிஐ வாயிலாக கட்டணமின்றி வழங்கப்படுகிறது.. எனவே, பிரதான பஸ் ஸ்டாண்டுகளில் நிலையங்களில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக டிக்கெட் விற்பனை மையங்களில் பெற்று, ரீசார்ஜ் செய்து கொண்டு, இந்த அட்டையை உபயோகிக்கலாம்.

ரீசார்ஜ் வசதிகள்: அதேபோல, மாநகர பஸ் கண்டக்டர்களிடமும் ரீசார்ஜ் செய்யும் வசதி விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், சிங்கார சென்னை கார்டின் சிறப்புகள் குறித்து, மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்தியாளர்களிடம் விளக்கி சொன்னார்.. அவர் சொல்லும்போது, "சிங்கார சென்னை அட்டையை மெட்ரோ ரெயிலிலும் பயண்படுத்திக் கொள்ளலாம், சென்னை மாநகர் பஸ்களிலும் பயன்படுத்தலாம். எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து இந்த அட்டையை அறிமுகம் செய்துள்ள நிலையில் முதற்கட்டமாக 50 அட்டைகளை வழங்கியிருக்கிறோம்.

சில்லறை பிரச்சனை: இந்த அட்டையை செல்போன் நம்பர் இணைந்து ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக ரூ.100 டாப் அப் செய்து கொண்டு, பஸ், ரயில்களில் தொடர்ந்து பயணம் மேற்கொள்ளலாம். இந்த பயண அட்டை திட்டத்தை உபயோகிப்பதால், பயணிகளுக்கும் கண்டக்டர்களுக்கும் இனிமேல் சில்லறை பிரச்சனை வர வாய்ப்பிருக்காது. இதனால், பணி சுமையும் குறையும் என எதிர்பார்க்கிறோம்.

மாநகர் போக்குவரத்து கழகத்தின் 20 பஸ் ஸ்டாண்டுகளில் அட்டைகள் வழங்கப்படுகின்றன.. இனி வரும் காலங்களில் கூடுதலான இடங்களில் அட்டை வழங்க உள்ளோம்.. ஏற்கனவே சிஎம்ஆர்எல் அட்டை வைத்திருப்பவர்கள் அதே அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம். இவர்கள் புதிய அட்டை வாங்க தேவையில்லை.. இந்த அட்டை சென்னையில் மட்டுமல்லாமல், வெளி மாநிலத்தில் இயங்கும் மெட்ரோ ரெயிலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு நபருக்கு ஒரு அட்டை மட்டுமே அனுமதி" என்று விவரித்துள்ளார்.

எங்கே ரீசார்ஜ்: முன்னதாக, இந்த அட்டைகளை ரீசார்ஜ் செய்வது குறித்து, மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகளும் கூறியிருந்தனர்.. அதாவது, இந்த அட்டைகள் கோயம்பேடு, பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராயநகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஓடி, அடையாறு, அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், வடபழனி, பெரம்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களில் கட்டணமின்றி வழங்கப்படும்.

இந்த அட்டைகளை ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைன் போர்ட்டல்கள், கைபேசி செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் இந்த அட்டையை எளிதாக ரீசார்ஜ் செய்யலாம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+