கஞ்சா வச்சிருக்கியான்னு கேட்குறாங்க.. நண்பரை அடிச்சிருக்காங்க! பாடகர் அசல் கோலார் குற்றச்சாட்டு
சென்னை: பிரபல ராப் பாடகர் அசல் கோலாரின் மலேசிய நண்பர் நவீன்ராஜை, குடியுரிமை அலுவலக அதிகாரிகள் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுற்றுலா விசாவிற்கு வந்த நவீன்ராஜ் விசா முடிந்தும் சென்னையில் இருந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரிக்க சென்றபோது அடித்ததாகவும் கஞ்சா வைத்து இருக்கிறீர்களா? எனக் கேட்டதாகவும் அசல் கோலார் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல ராப் பாடகர் அசல் கோலார். வசந்தகுமார் என்னும் இயற்பெயர் கொண்ட இவர், திரைத்துறையில் அசல் கோலார் என்று அறியப்படுகிறார். இவர் கானா இசை & ராப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். யூ டியூப்பில் இவரது ராப் பாடல்கள் பதிவேற்றம் செய்து திரைத்துறையில் பலரின் கவனத்திற்கு சென்று தற்போது திரைப்பட பாடல்கள் பாடி வருகிறார்.

'யார்ரா அந்த பையன்.. நான்தான் அந்தப் பையன்..', 'என்ன சண்டைக்குக் கூப்டா..' உள்ளிட்ட பாடல்கள் மூலம் இன்றைய தலைமுறையினர் அதிகம் முணுமுணுக்கும் பாடல்கள் லிஸ்ட்டில் இவரது பாடலும் இடம்பெற்றுள்ளது. தமிழ், மலையாள மொழிகளில் பரபரப்பான பாடகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கானா இசை, ராப் பாடல்கள் பாடுவதில் வல்லவரான இவர் கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசனிலும் பங்கேற்று இருந்தார்.
இத்தகைய சூழலில், அசல் கோலார் இன்று பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். தனது நண்பரை குடியுரிமை அதிகாரிகள் தாக்கியதாக குற்றம் சாட்டியிருக்கிறார் அசல் கோலார். அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:- என்னுடைய மலேசிய நண்பர் நவீன்ராஜ். இவர் சென்னையில் தற்போது இருக்கிறார். கடந்த 2.5 மாதங்களாக இவர் சென்னையில் உள்ளார். சுற்றுலா விசாவில் வந்து இருக்கிறார். ஒரு மாதம் தங்கியிருந்தார்.
சுற்றுலா விசா காலாவதி ஆகும்போது அதை புதுப்பிக்க (renewal) சென்றுள்ளார். அவரோட நாட்டில் இருந்து ரெனிவல் செய்து இருக்கிறார். எங்களுக்கு இன்னைக்குதான் தெரியும்.. டூரிஸ்ட் விசாவை நீட்டிக்க முடியாது என்று... இவர் விமானம் ஏறி ஊருக்கு போகும் போது விமான நிலையத்தில் இருந்து வெளிய வர சொல்லியிருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாகவே எல்லா அலுவலகத்திற்கும் சென்று கொண்டிருக்கிறார்.
மலேசியா அலுவலகம், பாஸ்போர்ட் ஆபிஸ் என போயிருக்கிறார். கடைசியாக குடியுரிமை அலுவலகம் வந்த போது, எங்கே தங்கியிருக்கிறார் என்று கேட்டார்கள். என் வீட்டில்தான் தங்கியிருக்கிறார் என்று நான் சொன்னேன். அப்போ உங்களுக்கு எப்படி இந்திய நண்பர்கள் என்று கேட்டனர். அப்போது எனது நண்பர், இந்திய நண்பர்கள் இருக்க கூடாதா? என்று கேட்டதற்கு அவரை ரூமிற்கு அழைத்து சென்று துன்புறுத்தியுள்ளனர். இவரை அடித்துள்ளனர். கீழ்த்தரமாக பேசியுள்ளனர்.
யார் யாரெல்லாம் பார்த்தீர்கள் என்று கேட்ட போது எல்லாரையும் தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். அதற்கப்புறம் இவரது பையை சோதித்து பார்த்து இருக்கிறார்கள். போனை பிடுங்கி வைத்துக்கொண்டார்க்ள். அசல் சான்றிதழ் அனைத்தையும் வாங்கிவிட்டார்கள். எங்க வீட்டில் தான் இருந்து இருக்கிறாங்க என்று தெரிந்தது அப்பாவுடைய முழு புரூப்பையும் கேட்டு இருக்கிறார்கள். அதன்பிறகுதான் 2 நாளில் தீர்வு காண்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
என்னுடைய ஷோவுக்காக கேரளா சென்றோம். மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு எதோ வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். இவர்கள் வெளிநாட்டுக்காரர்கள். இந்திய விசா வாங்கி வந்து இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரே நாடு என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். எனவே வேறு மாநிலம் செல்வதற்கு என்ன ஆதாரம் தேவை என்று தெரியவில்லை.
அதோடு, இவரிடம் நீங்கள் என்னவெல்லாம் பண்ணியிருக்கீங்க... எதேனும் போதைப்பொருள் வச்சிருந்தீங்களா எனக்கேட்டு ரொம்ப ஃபோர்ஸ் பண்ணியிருக்கிறார்கள். அவரை ஒத்துக்க வைக்க கையாண்ட மாதிரிதான் இது தெரிகிறது. டூரிஸ்ட்களை உள்ளே கூப்டு போய் அடிப்பார்களா?. இவ்வாறு அவர் கூறினார்.
-
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications