எஸ்பிபி மகன் சரண் வீட்டில் குடியிருக்கும் உதவி இயக்குநர் வாடகை தராமல் மிரட்டல்.. போலீசில் புகார்!
சென்னை: பாடகர் எஸ்.பி.சரண், தனக்கு உதவி இயக்குநர் ஒருவர் மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வாடகை பணம் தராமல் ஆபாசமாக பேசி மிரட்டுவதாக உதவி இயக்குனர் திருஞானம் என்பவர் மீது பாடகர் எஸ்.பி. சரண் புகார் அளித்துள்ளார். 23 மாதங்களுக்கான வாடகை தராமல் திருஞானம் மிரட்டுவதாக எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரண். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சரோஜா, துரோகி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும், சினிமா தயாரிப்பாளராக சென்னை 28, மழை, ஆரண்ய காண்டம் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். தற்போது எஸ்.பி.பி. சரண் டி.வி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், வாடகை பணம் தராமல் ஆபாசமாக பேசி மிரட்டுவதாக உதவி இயக்குநர் திருஞானம் என்பவர் மீது பாடகர் எஸ்.பி. சரண் புகார் அளித்துள்ளார். சாலிகிராமத்தில் உள்ள குடியிருப்பை உதவி இயக்குநர் திருஞானம் என்பவரிடம் வாடகைக்கு விட்டுள்ளார் சரண். இதையடுத்து, உதவி இயக்குநர் திருஞானம் 23 மாதங்களுக்கான வாடகை தராமல் இருந்து வந்துள்ளார். இது பற்றி கேட்ட எஸ்.பி.சரணை அவர் மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில், பாடகர் எஸ்.பி. சரண் அந்த உதவி இயக்குநர் திருஞானம் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆபாசமாக பேசி மிரட்டியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். பாடகர் எஸ்.பி. சரண் உதவி இயக்குநர் ஒருவர் மீது போலீசில் புகார் அளித்திருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications