Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிண்டி ரேஸ் கிளப் நிலம் வழக்கில் திருப்பம்.. தனி நீதிபதி விசாரிக்க தடை.. ஐகோர்ட்டில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிண்டி ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்ததை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி விசாரிக்க தடை இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இந்த இடத்தில் அரசின் திட்டங்களை செயல்படுத்த தனி நீதிபதி விதித்த தடையையும் இரு நீதிபதிகள் அமர்வு நீக்கி உள்ளது. அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகை தொகை ரூ.730.86 கோடி பாக்கி வைக்கப்பட்டது. இந்த தொகையை செலுத்தாவிட்டால், மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்திடம் இருந்து நிலத்தை மீட்டு, பொதுப் பயன்பாடுகளுக்கு அரசு பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Single Judge s order in Guindy Race Club land case stayed What happened in the High Court

இதையடுத்து குத்தகையை ரத்து செய்த தமிழ்நாடு அரசு சென்னை ரேஸ் கிளப் நிர்வாகத்திடமிருந்து மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கர் பரப்பில் தோட்டக்கலைத்துறை சார்பி்ல் பசுமை வெளிப்பூங்காவும், மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் மழைநீர் சேகரிப்பு குளங்கள் அமைக்கவும் முடிவு செய்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது..

இதை எதிர்த்து கிண்டி ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு நிலுவையில் இருந்தது. இந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பொதுநலன் கருதி அங்கு நடைபெறும் திட்டப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.

இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்தநிலையில், நிலத்தை அரசு சுவாதீனம் எடுத்ததை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை தனி நீதிபதி விசாரிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது சபீக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், "தனி நீதிபதி முன்பாக நிலுவையில் இருந்து வரும் வழக்கில் ஏதேனும் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அது மேல்முறையீட்டு வழக்கை செல்லாததாக்கி விடும் என்பதால், தனி நீதிபதி வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ''தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளிக்கும் வரை, ரேஸ் கிளப் நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க இடைக்கால தடை விதிக்கிறோம். அரசின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்'' என்று உத்தரவிட்டார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+