சிக்கலை பாருங்க.. உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?

உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து போடப்போவது யார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சினையினால் உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற சிக்கல் எழுந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில் இந்த படிவங்களில் யார் கையெழுத்து போடுவார்கள் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

Recommended Video

    பன்னீர் இப்போ கண்ணீர் செல்வம்.. சுயநலவாதி ஓபிஎஸ்.. இப்படி செய்யலாமா? போட்டுத்தாக்கிய ராஜன் செல்லப்பா

    அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பக்கம் நிர்வாகிகள் நிற்கின்றனர். ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிர்ப்பு பலமாக உள்ளது. தொண்டர்கள் தன்பக்கம் உள்ளதாக கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.

    தலைமைப்பதவிக்கு ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் போடும் சண்டையால் கட்சி பிளவு படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கட்சியின் சின்னமும், கொடியும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    உள்ளாட்சி இடைத்தேர்தல்

    உள்ளாட்சி இடைத்தேர்தல்

    ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

     510 பதவிகளுக்கு இடைத்தேர்தல்

    510 பதவிகளுக்கு இடைத்தேர்தல்

    இதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாவட்ட கவுன்சிவர், 20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 2 மாநகராட்சி கவுன்சிலர், 2 நகராட்சி கவுன்சிலர், 8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

    வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

    இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றைய தினம் கடைசிநாள் ஆகும். இதன்படி இன்று மாலை 5 மணிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். மொத்தம் தேர்தல் நடைபெற உள்ள 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறவுள்ளதால், வேட்பாளர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கட்சிகளின் சின்னத்தை ஒதுக்க உள்ளது.

    படிவம் ஏ மற்றும் பி

    படிவம் ஏ மற்றும் பி

    மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 34 பதவியிடங்ளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது.இந்த பதவிகளுக்கு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்த கட்சிகளின் சின்னங்களை ஒதுக்கீடு செய்ய ஏ மற்றும் பி என்ற இரண்டு படிவங்களை சமர்பிக்க வேண்டும்.

    தலைவர்கள் கையெழுத்து

    தலைவர்கள் கையெழுத்து

    இந்த படிவங்களில் சம்பந்தபட்ட கட்சியின் தலைவர்கள் கையெழுத்து போட வேண்டும். அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்ட பின்னர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் இந்த படிவங்களில் கையெழுத்து போட்டு வந்தனர்.

    ஜூன் 30க்கு படிவம் தர வேண்டும்

    ஜூன் 30க்கு படிவம் தர வேண்டும்

    தற்போது அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி சர்ச்சையினால், ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே செல்லாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில் இந்த படிவங்களில் யார் கையெழுத்து இடுவார்கள் என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த ஏ மற்றும் பி படிவங்களை வேட்புமனுக்கள் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான ஜூன் 30ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும்.

    தொண்டர்கள் பாதிப்பு

    தொண்டர்கள் பாதிப்பு

    இதன்படி அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வரும் 30ஆம் தேதிக்குள் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்தைப் பெற்று வேட்புமனுக்களை சமர்பிப்பார்களா அல்லது மாட்டார்களா? அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தலைமை பதவிக்கு போடும் சண்டையால் சாதாரண தொண்டர்கள்தான் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+