இதய பாதிப்பு.. உயிருக்காக போராடும் 10 வயதே ஆன லேகா ஸ்ரீ.. தந்தையில்லாத சிறுமிக்கு உதவுங்கள்
சென்னை: சென்னையை அடுத்த திருவள்ளூரில் வசித்து வரும் 10 வயது சிறுமி லேகா ஸ்ரீக்கு இதயத்தில் துளை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது செகண்டம் ஏட்ரியல் செப்டல் குறைபாடு (ASD) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சிறுமி உயிர் பிழைக்க வேண்டும் என்றால் சுமார் 2 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். லேகா ஸ்ரீ தாய் தேவகி தனி ஒருவராக இவ்வளவு பெரிய பணத்தை திரட்ட முடியாததால் சிறுமியின் உயிரை காக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். உங்களது சிறு உதவி கூட சிறுமியின் உயிரை காப்பாற்ற உதவும்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி லேகா ஸ்ரீ, புத்திசாலித்தனமும் சுறுசுறுப்பும் நிறைந்தவர். உள்ளூர் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் அவர், கல்வி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். எப்போதும் சிரித்த முகத்துடன், சிறு வயதுக்கே உரிய ஆர்வமும் கொண்ட லேகா ஸ்ரீயின் வாழ்க்கையில் எந்த குழந்தையும் சந்திக்க கூடாத சோகமும் நிறைந்துள்ளது.
ஆம்.. லேகா ஸ்ரீ 8 மாத குழந்தையாக இருந்த போது அவர்கள் குடும்பத்தையே புரட்டி போடும் அளவுக்கு ஒரு நிகழ்வு நடைபெற்றது. லேகா ஸ்ரீக்கு காச நோய் கண்டறியப்பட்டது. இதையடுத்து, பல அரசு மருத்துவமனைகளில் மாதக்கணக்கில் சிகிச்சை பெற்ற பிறகு, நோயிலிருந்து மீண்டு வந்தார்.

இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், லேகா ஸ்ரீயின் வாழ்க்கை போராட்டம் முழுமையாக முடியவில்லை என்பது ஒரு வருடத்திற்கு முன்புதான் தெரியவந்தது. அதாவது, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, லேகா ஸ்ரீக்கு மார்பு வலி ஏற்பட்டதுடன், அவரது வயதுடைய மற்ற குழந்தைகளைப் போல எடை அதிகரிக்காமல் போனது.
இதனால், கவலையடைந்த அவரது தாய் தேவகி, லேகாஸ்ரீயை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பல பரிசோதனைகளுக்குப் பிறகு, அவரது இதயத்தில் துளை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும், அவரது உடல்நிலை மேம்படவில்லை. பள்ளியில் நடந்த வழக்கமான மருத்துவ பரிசோதனையின் போது, மருத்துவர்கள் மீண்டும் அவரது நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து , லேகா ஸ்ரீ MIOT மருத்துவமனைகள் ஏற்பாடு செய்த இலவச இருதய முகாமிற்கு பரிந்துரைக்கப்பட்டார். மேற்கொண்டு பரிசோதனை செய்ததில், லேகா ஸ்ரீக்கு செகண்டம் ஏட்ரியல் செப்டல் குறைபாடு (ASD) இருப்பது உறுதி செய்யப்பட்டது - அவரது வலது இதய அறைகள் (RA/RV) ஏற்கனவே விரிவடைந்துள்ளன, மேலும் குணப்படுத்த முடியாத பாதிப்பைத் தடுக்க அவசர ASD கருவி மூடும் செயல்முறையை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இந்த உயிர்காக்கும் செயல்முறைக்கான செலவு ₹2,00,000/- ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. லேகா ஸ்ரீ தாய் தேவகி தனி ஒருவராக தனது மகளை வளர்த்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கணவர் இழந்துவிட்டதால் , குடும்பத்தை காப்பாற்ற கட்டுமான வேலைகளுக்கு தேவகி சென்று வருகிறார். ஒருநாளைக்கு ரூ.450 மட்டுமே சம்பாதிக்கும் தேவகியால் இவ்வளவு பெரிய தொகையை புரட்டுவது என்பது சாத்தியமற்றது.
எனவே, லேகா ஸ்ரீ சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். நீங்கள் பங்களிக்கும் சிறிய உதவி கூட லேகே ஸ்ரீயின் உயிரை காப்பாற்றும். அவர் மீண்டும் பள்ளிக்கு சென்று மற்ற பிள்ளைகளை போல வாழ்க்கையில் பெரிய உயரங்களை எட்ட உங்கள் கருணை உதவும். லேகா ஸ்ரீயின் உயிரைக் காப்பாற்ற இப்போதே முன்வந்து உதவுங்கள்.












Click it and Unblock the Notifications