ரூ.500 இருக்கா? செல்வம் சேர்க்கும் எஸ்ஐபி.. ரூ.10-ல் தொடங்கி லட்சத்தை அள்ளலாம்.. சூப்பர் SIP திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குறைவான முதலீட்டில், அதிக லாபத்தை தரக்கூடிய எஸ்ஐபி சேமிப்பு பற்றி தெரியுமா? முதலீடு செய்வதில் சுதந்திரத்தை தரக்கூடிய இந்த எஸ்ஐபி திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.

ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தை கடைப்பிடித்து சேமித்தால், அதன் வாயிலாக குடும்ப தேவைகளை நிறைவு செய்துவிடலாம்.. அத்துடன் எதிர்பாராத செலவுகளையும் சமாளித்துவிடலாம்.

sip mutual fund

எனவே, சேமிப்பின் அவசியத்தை பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே எடுத்துரைத்து, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்...

சேமிப்பு அவசியம்: அதுமட்டுமல்ல, இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு என்பதை உணர்ந்து, எதிர்கால தேவைக்காக சேமிப்புகளை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். சேமிப்பே ஒருவரது எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்கு உரியதாக மாற்றக்கூடியது.. அதேபோல, அதை சரியான விதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம்.

அந்தவகையில் குறைவான முதலீட்டில், அதிக பணத்தை சேமிக்கும் திட்டங்கள் பல உள்ளன.. இதில் மிக முக்கியமானது, சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று சொல்லப்படும் எஸ்ஐபி ஆகும்.. அதாவது, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் இந்தக் கனவை நிறைவேற்ற முடியும். எஸ்ஐபியில் நீண்ட காலத்திற்கு அதிக வருமானத்திற்கான சாத்தியத்தையும் பெறலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்.. இதற்கு தினமும் வெறும் 10 ரூபாயை ஒதுக்கினாலே போதும்.. ஒவ்வொரு மாதமும் 300 ரூபாயாக முதலீடு செய்யும்போது, ஒவ்வொரு வருடமும் முதலீட்டை 10 சதவீதம் வரை வளர்த்து கொள்ள முடியும். அப்படியானால், 30 ஆண்டுகளில் 45 லட்சம் ரூபாயை எளிதாக சேமிக்க முடியும்...

கோடீஸ்வரர்: உதாரணத்துக்கு 30 வயதான இளைஞர் 17 ஆண்டுகள் தொடர்ந்து சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தால், 47வது வயதிலேயே கோடீஸ்வரர் ஆகி விடலாம். அத்துடன், உங்களால் கார்பஸை உருவாக்க முடியும். இதன் முதலீடு 5 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் என்றிருந்தாலும், அதிக பலன்களை பெற முடியும்..

எளிய வழிமுறைகள் மூலம் ஆன்லைனில் எளிதாக இந்த முதலீட்டை நீங்கள் செய்யலாம்.. ஒட்டுமொத்தமாக செய்யும் முதலீடுகள் அதிக மூலதன அபாயத்திற்கு ஆளாக்கலாம்.. ஆனால், இந்த எஸ்ஐபி -யில் உங்களது முதலீட்டை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அதிகரிக்க செய்கிறது. அத்துடன், மூலதனத்திற்கான ஆபத்தையும் குறைக்கிறது.. நீண்டகால அடிப்படையில் லாபமும் கணிசமாக கிடைக்கிறது.

ஸ்பெஷாலிட்டி: சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை அவரவர் வசதிக்கேற்ப முதலீடு செய்யும் திட்டமாக இந்த எஸ்ஐபி விளங்குகிறது.. அதுமட்டுமல்ல, மாதாந்திர சேமிப்பு, பணவீக்கத்தை சமன்செய்யும் முதலீடு, ரிஸ்க்குக்கேற்ற வருமானம், செல்வத்தைப் பெருக்கும் திறன் போன்றவையெல்லாமே எஸ்ஐபி முதலீடு திட்டத்தின் ஸ்பெஷாலிட்டியாகும். அந்தவகையில், குறைவான முதலீட்டில் அதிக பலனை பெற எஸ்ஐபி சிறந்த சாய்ஸ் ஆக விளங்குகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+