SIR: செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு ஷாக்! 25% வாக்காளர்கள் நீக்கம்! தமிழ்நாட்டிலேயே 2ஆவது டாப்!
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற SIR பணிகளுக்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியானது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமாக இருந்த 27,87,362 வாக்காளர்களில் 7,01,871 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) கடந்த மாதம் தொடங்கியது. இதனையடுத்து இதற்கான பணிகளில் அரசு அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். இம்மாதம் 14ம் தேதி வரை இதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 14 ஆம் தேதியோடு எஸ்ஐஆர் படிவங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டன.

தகுதியான வாக்காளர்கள் புலம் பெயர்ந்தவர்கள், இறப்பு, இடம் மாற்றம் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இரண்டு மாதங்கள் நடைபெற்ற இந்த பணி முழுவதுமாக முடிக்கப்பட்டு தற்போது தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 27,87,362 வாக்காளர்களில் 7,01,871 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இரட்டைப் பதிவு, இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், வாக்காளர் எண்ணிக்கை 20,85,491 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலமாக மொத்த வாக்காளர்களில் 25% குறைந்துள்ளது.
சோழிங்கநல்லூர் தொகுதி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7,02,450, நீக்கம் - 2,18,444, இறுதி வாக்காளர் எண்ணிக்கை- 4,84,005.
பல்லாவரம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 4,44,498, நீக்கம்- 1,49,789, இறுதி வாக்காளர் எண்ணிக்கை - 2,94,712.
தாம்பரம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 4,15,483, நீக்கம் - 1,21,137, இறுதி வாக்காளர் எண்ணிக்கை - 2,94,346.
செங்கல்பட்டு மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 4,45,500, நீக்கம்- 1,06,270, இறுதி வாக்காளர் எண்ணிக்கை - 3,39,231.
திருப்போரூர் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 3,19,534, நீக்கம் - 47,558, இறுதி வாக்காளர் எண்ணிக்கை - 2,71,976.
செய்யூர் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 2,28,255, நீக்கம் - 32,394, இறுதி வாக்காளர் எண்ணிக்கை - 1,95,861.
மதுராந்தகம் மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 2,31,642, நீக்கம் - 26,309, இறுதி வாக்காளர் எண்ணிக்கை 2,05,333.
அதிகபட்சமாக, சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் 2,18,444 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சோழிங்கநல்லூரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7,02,450-லிருந்து 4,84,005 ஆகக் குறைந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications