SIR படிவத்தில் நிரப்ப.. 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை தேடுவதற்கான வழிமுறைகள் வெளியீடு!
சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்(SIR) நடவடிக்கையை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், SIR படிவத்தில் நிரப்ப 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை தேடுவதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "இணையதளம் மூலம் (online) கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் சிறப்பு தீவிர திருத்தம் 2002 / 2005 இல் இணையதள தேடுதல் வசதியை பொறுத்தவரை, முந்தைய தீவிர திருத்தம் 2002/2005 இன் வாக்காளர் பட்டியலில் வாக்காளர் தங்களது விவரங்களை எளிதாக கண்டறிய வசதியாக https://www.voters.ecl.gov.in/என்ற இணையதளத்தில் உள்ளிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அணுகக்கூடிய வகையில் (www.voters.eci.gov.in) "Search your name in the last SIR" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும், அதில் மாநிலத்தின் பெயரை (தமிழ்நாடு) தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் "தமிழ்நாடு வாக்காளர் சேவை தளத்தில் "பெயர் மூலம் தேடுதல்" அல்லது "EPIC எண் மூலம் தேடுதல்" என்ற விருப்பங்களைப் பயன்படுத்தி தங்கள் விவரங்களை மீட்டெடுக்கலாம். " பெயர் மூலம் தேடுதல்" என்ற விருப்பத்தின் மூலம் தேடும்போது மாவட்டத்தின் பெயர், சட்டமன்ற தொகுதி பெயர், வாக்காளரின் பெயர், தந்தை / தாய் / கணவர் / சட்டப்பூர்வ பாதுகாவலர் பெயர், பாலினம் மற்றும் சரிபார்ப்புக் குறியீடு ஆகியவற்றை உள்ளீடு செய்து வாக்காளர் தங்களது விவரங்களைப் பெறலாம்.
இணையதளம் மூலம் (online) கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்களை பொறுத்தவரை, வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ https://voters.eci.gov.in கணக்கீட்டு படிவத்தை (Enumeration Form) இணையதளம் மூலம் (online) நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணினை பயன்படுத்தி இணையதளம் மூலம் (online) உள் நுழைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட வேண்டும். உள்நுழைந்த பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் "Fill Enumeration Form" என்ற இணைப்பினை தேர்வு செய்யலாம்.
இந்த வசதியினை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது e-sign பக்கத்திற்கு மாறும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அந்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும்.
தங்களது கைபேசி எண்களை பதிவு செய்திருக்கும். மேலும் வாக்காளர் பட்டியல் மற்றும் ஆதார் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications