1 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்படுது! தமிழ்நாட்டில் நீக்கப்படும் 97 லட்சம் பேர்? அஸ்திவாரமே காலி
சென்னை: தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 1 கோடி பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லாதவர்கள் புதிய வாக்காளராக பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய வாக்காளர்கள், இடம் மாறியோர் மற்றும் சிறப்பு ஆய்வு திருத்தத்தில் (SIR) விடுபட்டோர் இனி பதிவு செய்யலாம்.

பிப்ரவரியில் வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற புதிய வாக்காளர்கள், இடம் மாறியோர் மற்றும் சிறப்பு ஆய்வு திருத்தத்தில் (SIR) விடுபட்டோர் இப்போது பதிவு செய்யலாம். பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) 3,700 சாவடி நிலை அலுவலர்கள் வழியாக படிவம்-6 ஐ விநியோகிக்கிறது. மேலும், தேர்தல் ஆணைய இணையதளத்திலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.
புதிய வாக்காளர்கள் பதிவு செய்யலாம்
பெரும்பாலான SIR படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டும், தாமதங்களும் தொழில்நுட்பக் கோளாறுகளும் நீடிப்பதை அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். எனவே, ஒரு முழுமையான சீரான ஆன்லைன் செயல்பாட்டிற்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் 77 லட்சம் வாக்காளர் கொத்தாக நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 10.40 லட்சம் பேர் வரை நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இறந்தவர்கள், இடம்மாறியவர்கள், தொடர்பு கொள்ள முடியாதவர்கள், இரட்டை வாக்கு கொண்டவர்கள் என்று 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 25.42 லட்சம் பேர் இறந்த காரணத்தால் பெயர்கள் நீக்கப்பட உள்ளன. 5.18 கோடி பேர் இதுவரை SIR படிவங்களை பதிவேற்றி உள்ளனர்.
77 லட்சம் பேர் வரை படிவங்களை வழங்கவில்லை. இடம் மாறியவர்கள் 39.27 லட்சம் பேர், 8.97 லட்சம் பேர் தொடர்பு கொள்ள முயடியாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற காரணங்களுக்காக 3.32 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளே பல தொகுதிகளில் மாறும் வாய்ப்புகள் உள்ளன.
SIR பணிகள் தமிழ்நாடு
இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டித்தது. கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி இந்த பணிகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன. எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழகத்தில் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அதாவது பிஎல்.ஓக்கள் ஈடுபட்டனர். கடந்த வாரம் முடிய வேண்டிய பணிகள் 1 வாரம் நீட்டிக்கப்பட்டு நேற்று நிறைவு பெற்றது.
கனமழை போன்ற காரணங்களால் கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை ஊழியர்கள் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரியுள்ளனர். எனினும், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க ஆணையம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட படிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் 19 ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாடு நீக்கம்
மொத்தமாக தமிழ்நாடு முழுக்க 3.98 லட்சம் இரட்டை பதிவுகள் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக சென்னையில் 14.26 லட்சம் பேர் நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
செங்கல்பட்டில் 7.00 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக 26.90 லட்சம் இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர். 13.60 லட்சம் பேர் கண்டுபிடிக்க முடியாதவர்கள் அல்லது ஆப்செண்ட் ஆனவர்கள் நீக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்களில் 6.30 கோடி பேருக்கு (98.34%) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 11 லட்சம் வாக்காளர்களை இன்னும் சென்றடையவில்லை. மொத்த வாக்காளர்களில் 6.29 கோடி படிவங்கள் (99%) டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications