Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு ’SIR’..1 லட்சம் ஓட்டு பறிபோகப் போகுது? அட்ரஸ் மாறிய சென்னையன்ஸ்! இதனை கண்டிப்பா செய்யனும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் "SIR" எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் சென்னையில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் முகவரி மாறிச் சென்றிருக்கும் நிலையில் அவர்களை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலரது வாக்குகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் முகவரி மாறியவர்கள் தாங்களாகவே தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

voter list Tamil Nadu Election Commission

இப்பணியின் ஒரு பகுதியாக, SIR (Special Intensive Revision) எனப்படும் கணக்கீட்டு படிவங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அல்லது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2026 தேர்தல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு வாக்காளருக்கும் தேவையான இரண்டு படிவங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குள் உள்ள தொகுதிகளில் மொத்தம் 3,178 பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பணியாளர்கள் வீடு தோறும் சென்று படிவங்களை வழங்கும் போது பல இடங்களில் வாக்காளர்கள் முகவரி மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

எஸ்ஐஆர் திருத்தம்

சிலர் வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளதால், அவர்களை நேரடியாக தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், முகவரி மாறிய வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதற்காக தாமாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் தங்களது புதிய முகவரிக்கேற்ப வாக்காளர் பதிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

சென்னை வாக்காளர்கள்

இதற்காக, தொகுதி தேர்தல் அலுவலக உதவி மைய எண்கள் - 044-25619523 மற்றும் 1950 ஆகியவற்றில் தொடர்புகொண்டு, சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்களின் விவரங்களைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர் பதிவு அலுவலர்களின் விவரங்கள் மற்றும் உதவி மைய எண்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. முகவரி மாறியவர்கள் உடனடியாக அவர்களை தொடர்புகொண்டு தங்களது பெயர் புதிய பட்டியலில் இடம்பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

முகவரி மாற்றம்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாத நிலை உருவாகாமல் தடுப்படு, ஒவ்வொருவரின் பொறுப்பும் ஆகும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதிப்படுத்தும் பணியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், வீடு தோறும் வழங்கப்படும் எஸ்ஐஆர் படிவங்களை கவனமாக நிரப்பி மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பதும் வாக்காளர்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. முகவரி மாறிய வாக்காளர்கள் கவனக்குறைவால் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருக்க தாமாக முன்வந்து படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+