முகுந்த் வரதராஜன் போர் குற்றவாளியா? இந்திய இறையாண்மைக்கெதிராக பேசும் திருமுருகன் காந்தி..பாஜக புகார்
சென்னை: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி உள்ள அமரன் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக சில அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில் மே 17 அமைப்பின் திருமுருகன் காந்தி கேப்டன் முகுந்த் வரதராஜனை போர்க் குற்றவாளி என பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகியான அஸ்வத்தாமன் புகார் அளித்துள்ளார்.
கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியானது.

கல்லூரி காலம் முதல் ராணுவத்தில் இணைந்து வீர மரணம் அடைந்தது வரையிலான மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இளம் வயது இளைஞராகவும், ராணுவ மேஜராகவும் தனது தேர்ந்த நடிப்பை சிவகார்த்திகேயன் வழங்கியிருந்தார்.
மேலும் இந்துவின் அற்புதமான கேரக்டரை சாய்பல்லவி தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இந்த படம் பெரு வெற்றி பெற்றிருக்கும் நிலையில் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்த நிலையில் படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு பிறகு படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் படம் குறித்து பேசிய மே 17 இயக்கத்தில் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி, அமரன் படத்தின் ஒரு காட்சியில் ஆயுதமற்ற வில்லனை கைது செய்யாமல் இந்திய ராணுவத்தின் முகத்தைப் பார் என சுட்டுக் கொலை செய்ததாக காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
ஆயுதமற்ற காயம் அடைந்த எதிரியை சுட்டுக் கொல்லக் கூடாது என்பது உலக அளவில் சட்டம் அதை மீறினால் அது போர் குற்றம் என பேசி இருந்தார். இந்த நிலையில் தேசத்திற்காக உயிர் நீத்த கேப்டன் முகுந்த் வரதராஜனை போர் குற்றவாளி என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி கூறியதாக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக நிர்வாகியான அஸ்வத்தாமன் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில்," திருமுருகன் காந்தி என்ற நபர் மே 17 என்கிற ஒரு குழுவை நடத்தி வருகிறார். இந்த நபர் 06.11.2024 அன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் குறித்து பேசிய மேற்கண்ட நபர், காஷ்மீர் தீவிரவாத இயக்கங்களின் தலைவர்களை மக்கள் உரிமை போராளிகள்' என்றும், காஷ்மீரின் தீவிரவாத குழுக்களை தேசிய இன விடுதலை போராளிகள் என்றும் கூறியுள்ளார். காஷ்மீர் தீவிரவாத குழுக்களை பாகிஸ்தான் எப்படி அழைக்குமோ அப்படி அழைத்திருக்கிறார் இந்த நபர்.
மேலும், காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் இந்திய ராணுவத்தின் அசோக சக்ரா விருதைப் பெற்ற மிக உயர்ந்த மாவீரர் முகுந்த் வரதராஜன் அவர்களை போர் குற்றவாளி என்றும் அருவருக்கத்தக்க விதத்தில் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு, தேசத்தின் இறையாண்மைக்கு எதிராகவும் பிரிவினை வாதத்தை நேரடியாக தூண்டுகிற விதத்திலும் அரசுக்கு எதிராக பகைமூட்டும் நோக்கத்தோடும் உள்ளது. மேலும் இந்திய ராணுவத்திற்கு எதிரான மனநிலையை மக்களிடையே விதைக்கும் நோக்கத்தோடும் இந்த மேற்கண்ட நபர் செயல்பட்டுள்ளார்.
இந்த நபர் ஏற்கனவே இந்திய தேசத்தை பொறுக்கி தேசம் என்று கூறியிருந்தார். அப்பொழுதே நான் அவர் மீது புகார் அளித்திருந்தேன். அப்பொழுதே தமிழக காவல்துறை இவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற நபர்களின் தேசத்திற்கு எதிரான தொடர் குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டிருக்கும். எனவே இனியும் தாமதிக்காமல் மேற்கண்ட நபர் மீது பாரதிய நியாய சட்டம் பிரிவு 152 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications