அமரனை தொடர்ந்து.. களமிறங்கிய 'மதராஸி'! எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்
சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடத்துள்ள 'மதராஸி' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது.
கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அமரன். சுயசரிதை படமாக இருந்தாலும் அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஏறத்தாழ இதே பாணியில், சுயசரிதை அல்லாமல் மதராஸி உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் இசை வெளியீட்டின்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்த விஷயம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிப்புதற்கான காரணமாக இருந்தது. அதாவது, இத்திரைப்படத்தின் கதை முதலில் ஷாருக்கனிடம் கூறியதாகவும், பின்னர் சிவகார்த்திகேயன் ஏற்று நடத்திருப்பதாகவும் கூறப்பட்டது. அடேங்கப்பா ஷாருக்கானுக்கு எழுதப்பட்ட கதையில்தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறாரா? என்று ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்தனர்.
இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன்தான் இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மதராஸி தொடர்பாக 'தமிழ் இந்து திசை' செய்தி ஊடகத்திற்கு சிவகார்த்திகேயன் அளித்த பேட்டியில், "இது ஒரு கமர்ஷியல் திரைப்படம். இந்த திரைப்படத்தின் மூலம் எந்த கருத்தும் சொல்லவில்லை. இது கமர்சியல் ஆக்சன் படம் மட்டுமே" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், அமரன் படத்தில் சிக்ஸ் பேக் வைக்க ஸ்டீராய்டு பயன்படுத்தியதாகவும், அதனால் உடல் நிலை மோசமடைந்ததாக பரவிய செய்திகள் வெறும் வதந்தி என்று கூறியிருந்தார். "எல்லா படங்களிலும் நான் எதிர்பார்ப்பது ஒன்றுதான். படத்தின் கதையை நான் எந்த அளவு்ககு தாங்கியிருக்கிறேன் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. அதுவே என்னுடைய வேலை என்று நினைக்கிறேன்" என்றும் கூறியிருக்கிறார்.
சமீப காலமாக சிவகார்த்திகேயனின் படங்கள் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக மாவீரன் திரைப்படத்திற்கு பிறகு ஆக்ஷன் படங்கள் நிறைய சிவகார்த்திகேயனை தேடி வந்தன. அந்த வகையில் மதராஸி இவருடைய 24வது திரைப்படமாகும். இதற்கு அடுத்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடத்து வருகிறார். எனவே அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications