70 கோடி சொகுசு பங்களாவில் சிவகார்த்திகேயன்..ஸ்ரீலீலா ஆட்டம்! உடைந்த பராசக்தி சீக்ரெட்! பிரபலம் நறுக்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான பராசக்தி படத்துக்கு சிக்கல் முளைத்திருக்கிறது. ஏற்கனவே அந்த படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிய நிலையில் சிவகார்த்திகேயன் இணைந்த நிலையில், படத்தின் சம்பளத்திற்கு பதிலாக ஈசிஆரில் 70 கோடி ரூபாய்க்கு பங்களா கட்டி தருவதாக ஆகாஷ் பாஸ்கரன் மூலம் டீல் பேசப்பட்டதாக கூறியிருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி. மேலும் படத்தில் குத்துப் பாடல்களுக்காக மட்டுமே ஸ்ரீலீலா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தின் 12 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தினர். குறிப்பாக பராசக்தி, இட்லி கடை உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டு நிலையில் அவர் தலைமறைவாகி இருக்கிறார்.
டாஸ்மாக் முறைகேடு மூலம் கிடைத்த பணத்தை வைத்து அவர் தயாரிப்பாளராக வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் இது தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாக இருக்கிறார்.

இந்த நிலையில் தனுஷ் நடித்த இட்லி கடை, சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி உள்ளிட்ட படங்கள் திரைக்கு வருமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் இந்த படங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடிகர்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக் கால தடை போட்டிருக்கும் நிலையில், பராசக்தி படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில், பராசக்தி படத்தின் சம்பளத்திற்கு பதிலாக ஈசிஆரில் 70 கோடி ரூபாய்க்கு பங்களா கட்டி தருவதாக சிவகார்த்திகேயனிடம் ஆகாஷ் பாஸ்கரன் மூலம் டீல் பேசப்பட்டதாக கூறியிருக்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி. இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,"முதலில் புறநானூறு என்ற பெயரில் தான் சுதா கொங்கரா பராசக்தி படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார். அதில் சூர்யாவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கவில்லை. இதை அடுத்து தான் பராசக்தி என அந்த படம் பெயர் மாற்றப்பட்டது.
அதில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு 70 கோடி சம்பளமாக பேசப்பட்டது. ஆனால் பணமாக தருவதற்கு பதிலாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் சிவகார்த்திகேயனின் பழைய வீட்டை இடித்துவிட்டு 70 கோடி ரூபாய்க்கு புதிய வீடு கட்டி தருவதாக ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் இருந்து ரத்தீஷ் டீல் பேசியுள்ளார். இதற்கு சிவகார்த்திகேயனும் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது" என பிஸ்மி கூறியிருக்கிறார்.
தற்போது அமலாக்கத்துறை வளையத்தில் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கி இருக்கும் நிலையில் ஊதியத்திற்காக பங்களாவை பெற்றுக் கொள்ள சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டதாக வந்த தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஆகாஷ் பாஸ்கரன் விவகாரம் தொடர்பாக சில நடிகர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் தெலுங்கு படத்தில் குத்து பாடல்கள் மூலம் பிரபலமான ஸ்ரீலீலா பராசக்தி படத்தில் நடிக்கிறார். ஆனால் கதைக்கு அவர் தேவையே இல்லை எனவும் வெறும் படத்தின் ப்ரோமோசனுக்காகவும், படத்தில் நடனம் ஆடுவதற்காக மட்டுமே ஸ்ரீலீலா படத்தில் இணைக்கப்பட்டு இருப்பதாக விமர்சிக்கின்றனர் நெட்டிசன்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications