சிவசங்கர் பாபாவின் வலதுக்கரமாக இருந்த சுஷ்மிதா.6 மாதக் கை குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்!
செங்கல்பட்டு: சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண்ணை பச்சிளம் குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன்பு சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர்.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்னும் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவர் அத்துமீறி பாலியல் சீண்டலில் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சிவசங்கர் பாபாவை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தீவிர விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைத்தனர்.

விசாரணை
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவிடம் மேற்கொண்ட விசாரணைக்குப்பின் சுஷ்மிதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு நள்ளிரவில் ஆஜர் படுத்தினர். பின்னர் அப்பெண்ணை வருகின்ற 2 ஆம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

பச்சிளம் குழந்தை
சிவசங்கர்பாபாவை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து இரண்டு நாட்கள்கூட ஆகாத நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணையும் அவரது பச்சிளம் குழந்தையுடன் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது நீதிபதி முன்பு ஆஜர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மூளைச் சலவை
சென்னையைச் சேர்ந்த இவர் சிவசங்கர் பாபாவுக்கு வலதுகரமாக செயல்பட்டவர். மாணவிகளை மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவின் சொகுசு பங்களாவுக்கு அனுப்பி வைப்பதும் சுஷ்மிதாவின் பணியாம். மாணவிகளிடம் பெரிய ஆளாக ஆக்குவதாக மூளைச் சலவை செய்து சிவசங்கரின் பங்களாவுக்கு அழைத்து சென்று ஏராளமான சிறுமிகளின் வாழ்க்கையை நாசப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னாள் மாணவி
இந்த சுஷ்மிதா, அந்த பள்ளியின் முன்னாள் மாணவியாவார். பட்டப்படிப்பு முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர். இவருக்கு பள்ளி வளாகத்திலேயே ஒரு வீடு கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் திருமணம் ஆனவுடன் சுஷ்மிதா கணவருடன் சென்னையில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications