“ஹிட்லர் கதி இதுதான்” - அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன பெரியார்.. என்ன ஒரு தீர்க்க தரிசனம்!!
சென்னை: சர்வாதிகாரி ஹிட்லரின் மரணத்தை பெரியார் முன்கூட்டியே யூகித்து அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலை இதழில் பதிவு செய்துள்ளார்.
இந்தத் தகவலை மூத்த ஊடகவியலாளர் ப.திருமாவேலன் தனது 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, மகாத்மா காந்தியையும் அவர் இறப்பதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் எச்சரித்துள்ளார்.

பெரியார் பற்றிய புத்தகம்
பெரியார் குறித்த அவதூறுகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஆதாரப்பூர்வ வரலாற்றுத் தகவல்களோடு, சுமார் 1,600 பக்கங்களில் ஆன 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' என்ற நூலை ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதினார். இந்த நூலை கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நூலில், இத்தனை ஆண்டு காலமாக பெரியார் குறித்து தமிழ்ச் சமூகப் பரப்பில் முன்வைக்கப்படும் அவதூறுகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியார் குறித்த பல ஆச்சர்ய தகவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

கதி இதுதான்
அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்ட நாள் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 30. இரண்டாம் உலகப்போர் குறித்த செய்திகள் பெரியாரின் 'விடுதலை' இதழில் அதிகமாக இடம்பெற்று வந்துள்ளன. 'ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு இறப்பார்' என 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதியிட்ட 'விடுதலை' இதழில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
அதாவதும் ஹிட்லர் மரணிப்பதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே ஹிட்லரின் மரணம் தற்கொலையாகத்தான் முடியும் என விடுதலையில் செய்தி வெளியிட்டுள்ளார் பெரியார். அந்தச் செய்திக்கு கீழே, 'நெஞ்சில் வஞ்சமும் ஜோப்பில் துப்பாக்கியும் வைத்திருப்பவன் கதி இதுதான்' என எழுதப்பட்டுள்ளது. இந்தத் தகவல் 'இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?' நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹிட்லர் தற்கொலை
ஜெர்மனியைச் சேர்ந்த சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கியவர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் 1945ஆம் ஆண்டில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லரின் நாசிப்படைகள் வீழ்ச்சியுற்றன.
அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பதுங்கு குழியில் தனது காதலி ஈவா பிரயுனுடம் அவருடன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலைத்தான் 6 ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனமாகப் பதிவு செய்துள்ளார் பெரியார்.

காந்தியை 20 ஆண்டுகளுக்கு முன்பே
இதேபோல, மகாத்மா காந்தியைச் சந்தித்தபோது, 'பார்ப்பனர்களுக்கு நீங்கள் பயன்படவில்லை என்றால் உங்களைச் சுட்டுவிடுவார்கள்' என எச்சரித்துள்ளார் பெரியார். அதுவும் காந்தி இந்துத்துவ பயங்கரவாதி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியிடம் எச்சரித்துள்ளார். இறுதியில் பெரியார் கூறியபடியே நடந்தது.
இதுபோன்ற பல தகவல்கள் பெரியார் குறித்த அந்த நூலில் இடம்பெற்றுள்ளதை அறிந்து பலரும் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications