ஸ்லீப்பர் கோச்சில் யார்னு பாருங்க.. ரயில்ல ரிசர்வேஷன் செய்தும் பிரயோஜனமில்லையா? பெருகும் அபராதங்கள்
சென்னை: முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துவிட்டதாம்.
நாட்டிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நெட்வொர்க் ரயில்வேயாகும்.. இதில் லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வருகிறார்கள். அதிலும், இந்தியா போன்ற நாடுகளில், ரயில்வேயின் முக்கியத்துவம் ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடியே உள்ளது. எனவேதான், ரயில்வே துறை பயணிகளின் வசதிக்காக ஏராளமான வசதிகளை செய்து வருகிறது.

வடமாநிலம்: குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளில், பயணிகளின் வசதியை கருத்தில்கொண்டு, ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டும் வருகின்றன. இதில் நிறைய ரெயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது...
ஆனாலும், சமீப காலமாகவே, ரெயில்களில், சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு, ரிசர்வேஷன் செய்திருக்கும் பெட்டிகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
ரிசர்வேஷன்: முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது மிகப்பெரிய பிரச்சினையாகவும் உருவெடுத்துவருகிறது. இதுநாள்வரை வடமாநிலங்களில் மட்டுமே இப்படியான சிக்கல்கள் எழுந்துவரும் நிலையில், நம்முடைய தமிழ்நாட்டிலும் தென்பட துவங்கியுள்ளது..
சென்னையில் இந்த பிரச்சனை சற்று ஓவராகவே உள்ளது.. காரணம், மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில், ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில், வடமாநிலத்தவர்கள் அடாவடித்தனமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறார்களாம்.. சிலசமயம், ஏசி கோச், ஸ்லீப்பர் கோச்களிலும், திடீரென ஏறிவிடுகிறார்களாம்.
பயணிகள்: அதாவது, முன்பதிவு செய்யாத பெட்டிகளுக்கான டிக்கெட்டை எடுத்துக் கொண்டு, முன்பதிவு பெட்டிகளில் வடமாநிலத்தவர்கள் பயணித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் ரிசர்வ் செய்தவர்கள், சீட் இல்லாமல் அவதிக்கு ஆளாகிவருகிறார்கள்.. இதைவிட கொடுமை, பெட்டிகளில் வடமாநிலத்தவர் முன்கூட்டியே ஏறிவிடுவதால், ரிசர்வ் செய்யப்பட்டவர்களால், ரயிலில் சிலசமயம் ஏறுவதற்குகூட முடிவதில்லை.. இதனால், வேறு வழியின்றி வீடு திரும்பி சென்ற அவலமும் சென்னையில் சமீபத்தில் நடந்துள்ளது.
வடமாநிலம் செல்லும் ரெயில்களில் மட்டும்தான் இப்படியொரு அவலம் நடக்கிறதாம். ரிசர்வ் செய்தும் ரயிலில் போக முடியாவிட்டால் எதற்காக நாங்கள் ரிசர்வ் செய்வது? ஸ்லீப்பர் கோச், ஏசி கோச்சையும் என எதையுமே இவர்கள் விடுவதில்லை.. என்று கொந்தளித்து கேட்கிறார்கள் பயணிகள்?
புள்ளி விவரம்: இப்படிப்பட்ட சூழலில், ரயில்வே நிர்வாகம் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருக்கிறது.. அதில், முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் கடந்த 2023 - 24ல் கடுமையாக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், கடந்த 2022-23ம் ஆண்டில், முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணித்தவர்கள் என 1.96 லட்சம் பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால், 2023-24ம் ஆண்டில் இந்த அபராதமானது, ரூ.4.18 லட்சமாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தவிர்த்து (கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரம் மண்டலத்தில் வரும்) 4 ரயில்வே மண்டலங்களிலும் கிடைத்திருக்கும் புள்ளி விவரம் இதுவாகும்.
ரயில்வே நிர்வாகம்: நீண்ட தொலைவு இயக்கப்படும் விரைவு ரயில்களில், முன்பதிவு டிக்கெட்டுகளை அதிகரிப்பது தொடர்பாக ரயில்வே இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போது ரயில் நிலையங்களில் 600 முதல் 700 முன்பதிவில்லா டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. ஆனால், ஒரு விரைவு ரயிலில் 2 முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படுகின்றன.
கடந்த வருடம் மட்டும், சென்னை மற்றும் சேலம் மண்டலங்களில், சுமார் 400 முதல் 500 பயணிகள், முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் எடுத்துவிட்டு, முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏறி வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணிக்கும்போது பிடிபட்டு அபராதம் செலுத்தியிருக்கிறார்களாம்.
ரயில் பயணிகள்: எனவே, சென்னை - திருச்சி, சென்னை - சேலம், சேலம் - கோவை போன்ற குறுகிய தூர வழித்தடங்களுக்கும், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் கூடுதலாக மெமு மற்றும் அந்தியோதையா ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகளின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications