நல்ல சேதி வரப்போகுது.. மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வேண்டி விண்ணப்பித்தீர்களா? இன்று முதல் எஸ்.எம்.எஸ்
சென்னை: மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து கிடைக்காமல் மேல்முறையீடு செய்து இருப்பவர்களின் கைப்பேசி எண்களுக்கு தமிழ்நாடு அரசு எஸ்.எம்.எஸ். ஒன்றை அனுப்பி வருகிறது.
ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தி இருக்கிறது. இதற்காக 3 கட்டங்களாக மாநிலம் முழுவதும் முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் இருக்கும் தகவல்களுடன் ஒப்பிடப்பட்டு சரிபார்க்கப்பட்டன. அதன் பின்னர் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இப்படி விபரங்கள் சரிபார்க்கப்பட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் முதல்கட்ட பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியது.
மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் என அரசு அறிவித்தது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் மகளிர் உரிமைத் தொகை பெற மேலும் 5,041 தகுதியான குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டனர். உரிமைத் தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த மாதமும் கள ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களில் உள்ள குடும்பத் தலைவிகளின் கைப்பேசி எண்களுக்கு அரசு ஊழியர்கள் தொடர்பு கொண்டனர்.
அவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டு உள்ள விபரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விபரங்களை பெண்களிடம் கேட்டு அது சரியா என உறுதிபடுத்தி, விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளில் இந்த மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் மேலும் பல மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்களுக்கு இந்த மாதமும் பணம் வரவில்லை. அக்டோபர் 25 ஆம் தேதி வரை 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்து உள்ளனர்.
மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தொடங்கி இருப்பதாகவும், தகுதியானவர்களுக்கு வரும் நவம்பர் 25 ஆம் தேதி முதல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. அந்த வகையில் தங்கள் மேல்முறையீட்டு மனு மீதான விண்ணப்பம் ஏற்கப்படுமா என்று குடும்பத் தலைவிகள் குறுஞ்செய்திக்காக எதிர்பார்த்து காத்து உள்ளனர்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!











Click it and Unblock the Notifications