கீரி கடித்தால் பாம்பு காலி.. பாம்பு கடித்தால் கீரிக்கு ஏன் ஒன்றும் ஆவதில்லை? பவர்ஃபுல் உண்மை இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயற்கையின் விசித்திரமான படைப்பில் பாம்பு மற்றும் கீரிக்கு இடையிலான பகை என்பது காலங்காலமாகத் தொடரும் ஒரு தீராத போராகும்.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? பாம்புக்கும் கீரிக்கும் நடக்கும் சண்டையில் பெரும்பாலும் கீரியே வெற்றி பெறுகிறது...இதற்கு என்ன காரணம் தெரியுமா? பாம்பு கடித்தால் கீரிக்கு ஏன் விஷம் ஏறுவதில்லை தெரியுமா? இங்கே அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

பாம்பு, கீரி இவை இரண்டுமே நிலப்பரப்பில் வாழும் மிகச்சிறந்த வேட்டையாடிகள்.. அதனால்தான் உணவு மற்றும் இருப்பிடத்திற்காக இவற்றுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன..

Snake Bites Mongoose

தனது குட்டிகளைப் பாம்புகளிடமிருந்து பாதுகாக்கவும் அதே சமயம் பாம்பையே தனது உணவாக மாற்றவும் கீரி துணிச்சலுடன் பாம்பை எதிர்கொள்கிறது,. அபாரமான வேகம் மற்றும் துல்லியமான தாக்குதல் உத்திகளே முக்கிய காரணமாக அமைகின்றன.

கீரி - பாம்பு சண்டை ஏன்

பாம்பின் தாக்குதலை முன்கூட்டியே கணித்து மின்னல் வேகத்தில் விலகி செல்லும் ஆற்றல் கொண்ட கீரி, பாம்பினை அலைக்கழித்து அலைக்கழித்து டயர்ட் ஆக்கிவிடுமாம்.. பிறகு சரியான தருணம் வரும்போது பாம்பின் தலையை தனது கூர்மையான பற்களால் கவ்விப் பிடித்து மண்டை ஓட்டைத் தகர்த்து அதைக் கொன்றுவிடக்கூடி சக்தி படைத்ததாம் கீரி.

அதேபோல பாம்பு எத்தனை முறை தீண்டினாலும் கீரி உடம்பில் விஷம் ஏறுவதில்லை. அது ஏன் தெரியுமா? கீரியின் உடலில் உள்ள தடிமனான முடிகள் ஒரு பாதுகாப்பு கவசம் போலச் செயல்பட்டு பாம்பின் பற்கள் அதன் தோலை ஆழமாகத் துளைக்காதவாறு பார்த்துக் கொள்கின்றன..

பாம்பின் விஷம்

அதுமட்டுமல்ல, பொதுவாக நமது நரம்பு மண்டலத்தில் தகவல்களை கடத்தவும் தசை இயக்கம் மற்றும் இதயத் துடிப்பை சீராக வைக்கவும் அசிடைல் கோலின் என்ற என்சைம் தேவையாகும்.

பாம்பின் விஷத்தில் உள்ள "ஆல்பா நியூரோடாக்சின்" என்ற வேதிப்பொருள் இந்த அசிடைல் கோலினைப் போலவே உருமாறி நரம்பு செல்களில் உள்ள ரிசப்டார் என்ற பகுதியை ஆக்கிரமித்துவிடுமாம்.. இதனால் மூளையிலிருந்து செல்லும் தகவல்கள் தடைபட்டு சுவாசம் நின்று மற்ற உயிரினங்களுக்கு மரணம் நிகழ்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் கீரியின் உடலில் இயற்கையிலேயே ஏற்பட்டுள்ள ஒரு தனித்துவமான மரபணு மாற்றத்தால் அதன் ரிசப்டார் அமைப்பு மற்ற பாலூட்டிகளை விட மாறுபட்ட வடிவத்தில் காணப்படுகிறது. அதன் உடலமைப்பும் டிஎன்ஏ மாற்றமுமே அதற்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய வரமாகும்.

நரம்பு மண்டலம் அமைப்பு

அதனால்தான் பாம்பின் விஷம் கீரியின் நரம்பு மண்டலத்தோடு ஒட்ட முடியாமல் போகிறது.. விஷம் உள்ளே சென்றாலும் நரம்புத் தகவல்கள் தடையின்றி நடப்பதால் கீரி உயிர் பிழைத்து விடுகிறது.. இதுமட்டுமின்றி கீரியின் ரத்தத்தில் உள்ள ஒரு வகை கிளைகோ புரோட்டீன் ரத்தத்தில் கலக்கும் விஷத்துடன் பிணைக்கப்பட்டு அதன் வீரியத்தை முழுமையாக நடுநிலையாக்க உதவுகிறதாம்.

இருந்தாலும் ஒரு பெரிய பாம்பு அதிகப்படியான விஷத்தை மீண்டும் மீண்டும் செலுத்தினால் கீரியும் உயிரிழக்க வாய்ப்பு உண்டு என்பது இயற்கையின் சமநிலையாகும்.. இந்தியாவில் சாம்பல் நிறக் கீரிகள் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்பதால் அவற்றின் முடிகளுக்காக வேட்டையாடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.. இத்தகைய அரிய உயிரினங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+