அனல் பறந்த சட்டசபைக் கூட்டம்.. உறுப்பினர்கள் விவாதங்களில் பிசி.. மெல்ல நுழைந்த பாம்பு!
தலைமை செயலக நுழைவு வாயிலில் சாரை பாம்பு ஒன்று பிடிபட்டது
சென்னை: சட்டப்பேரவை நடைபெற்று கொண்டிருக்கும்போது தலைமை செயலகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 3-ம் நாளான இன்றும் சட்டப்பேரவையில் அனைவரும் கூடியிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள், உள்ளிட்ட கார சார விவாதங்கள் உள்ளே நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது, தலைமைச் செயலகத்தின், 6-வது நுழைவு வாயில் பகுதியில் இருக்கும் பூங்கா ஒன்றில் ஏதோ ஊர்ந்து போவதை போல அங்கிருந்த ஊழியர்கள் கண்டனர்.
பின்னர் அருகில் சென்று பார்த்தபோதுதான் அது ஒரு சாரை பாம்பு என தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து தலைமைச் செயலகத்தின் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள், பூங்காவில் மறைந்திருந்த சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு போனார்கள்.
தலைமை செயலகம் சுற்றிலும் நிறைய மரங்கள், புதர்கள் உள்ளதால் இப்படி பாம்புகள் உள்ளே நுழைந்துவிடுவதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென நுழைவு வாயிலில் பாம்பு நுழைந்த சம்பவம் தலைமை செயலக ஊழியர்களிடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications