வெற்றிக்கு அருகே சென்ற இந்தியா.. பறிக்கப்பட்ட சூப்பர் சான்ஸ்.. சர்வதேச வல்லுனர் சொன்ன முக்கிய விஷயம்
சென்னை: வெற்றிக்கு அருகே நாம் செல்லும் போதெல்லாம்.. இந்தியாவின் வெற்றி பறிக்கப்படுகிறது.. வெற்றியின் முனையில் இருக்கும் போது நம்முடைய வெற்றி பறிக்கப்படுகிறது என்று சர்வதேச அரசியல் வல்லுனர் பிரம்மா செல்லனி குறிப்பிட்டு உள்ளார்.
சர்வதேச அரசியல் வல்லுனர் பிரம்மா செல்லனி செய்த போஸ்டில்,

1948: ஜம்மு காஷ்மீர் பிரச்சினைகளை இந்தியா ஐ.நா.விடம் எடுத்துச் சென்றது. தேவையின்றி இந்திய இராணுவம் வெற்றியை நோக்கிச் செல்லும்போது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
1954: எந்தவிதமான பிரதிபலனும் இல்லாமல், திபெத்தில் இந்தியா தனது எல்லைக்கு அப்பாற்பட்ட உரிமைகளை விட்டுக்கொடுத்தது. தேவையின்றி "சீனாவின் திபெத் பிராந்தியத்தை" இந்தியா அங்கீகரித்தது.
1960: சிந்து நதிப் படுகை நீரில் ஐந்தில் நான்கு பங்கை அதன் கீழ்நோக்கிய நாடான பாகிஸ்தானுக்கு ஒதுக்கி வைக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது.
1966: 1965 போரின் போது மிகவும் முக்கியமான ஹாஜி பீர் என்ற இடத்தை இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கியது. இது பின்னர் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்வதற்கான ஏவுதளமாக மாறியது.
1972: சிம்லாவில் நடந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானிடமிருந்து எதையும் பெறாமல் இந்தியா தனது போர் ஆதாயங்களை விட்டுக்கொடுத்தது. இந்த பேச்சுவார்த்தை ஒப்பந்தம் போரை நிறுத்த காரணமாக இருந்தாலும், இந்தியாவிற்கு சாதகமாக அமையவில்லை.
2021: லடாக்கின் முக்கிய எல்லைப் பகுதிகளில் சீனா 2020ல் அத்துமீறியது. இதற்கு பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா கைலாஷ் ஹைட்ஸை காலி செய்து வெளியேறியது. லடாக்கில் சீனாவின் கை ஓங்க இது முக்கிய காரணமாக அமைந்தது. இது இந்தியாவிற்கு சிக்கலாக இப்போது மாறி உள்ளது.
2025: இப்போது பாகிஸ்தான் இந்தியா இடையிலான போரில் இந்தியா வெற்றிக்கு மிக அருகில் இருந்தது. பாகிஸ்தானின் உட்பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்தியா முன்னேறி சென்றது. ஆனால் இந்தியா வெற்றிக்கு அருகே இருக்கும் போது போர் நிறுத்தும் செய்தது இந்தியாவிற்கு சிக்கலாக மாறி உள்ளது. சிறப்பாக தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெறும் 4 நாட்களில் நிறுத்தப்பட்டு உள்ளது.
போர் நிறுத்தம்
பாகிஸ்தான் மீதான தாக்குதலை நேற்று முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற நேரடிப் பேச்சு வார்த்தையில் தாக்குதலை நிறுத்துவது என முடிவு என்று தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்தது. அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்துவதாக இந்தியா - பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மோதல்களை நிறுத்துவது குறித்து நேற்று மதியம் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு நாட்டு பேச்சுவார்த்தையின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதே சமயம், பயங்கரவாதத்திற்கு எதிரான சமரசமில்லா நடவடிக்கையில் இந்தியா ஒருபோதும் பின்வாங்காது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதன் பின் நேற்று இரவு மீண்டும் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறிய நிலையில் உடனே இந்திய ராணுவம் தலையிட்டு பதிலடி தாக்குதல் நடத்தியது. அதன்பின் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த எல்லையில் அமைதி திரும்பியது.












Click it and Unblock the Notifications