கோயம்பேடு சந்தை மூலம் இதுவரை தமிழகத்தில் 119 பேருக்கு கொரோனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு சந்தை மூலம் இதுவரை 119 பேருக்கு கொரோனா பரவியுள்ளதாக பகீர் தகவல் கிடைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் 39,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,320 பேர் பலியாகியுள்ளனர். அது போல் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் கொரோனாவால் 2,757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்தம் 1257 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் கொரோனா பரவும் மையமாக மாறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இதுவரை கோயம்பேடு மூலம் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூரில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர் சென்ற இருவருக்கு நேற்று முன் தினம் கொரோனா ஏற்பட்டுள்ளது.

பாதித்தோர் எண்ணிக்கை

பாதித்தோர் எண்ணிக்கை

அது போல் நேற்று 7 பேருக்கும் இன்று 8 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூரில் கோயம்பேடு சந்தை மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 ஆகும். அது போல் அரியலூரில் இன்று மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு கோயம்பேடு மூலம் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

சென்னையில் வியாபாரிகள் உள்பட 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் நேற்று முன் தினம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து திரும்பிய ஒருவருக்கும் நேற்று இருவருக்கும் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. சென்னை கோயம்பேட்டிலிருந்து காஞ்சிபுரம் வந்த தொழிலாளர்களில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்போடு மூலம் பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தனிமை

தனிமை

கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் அறிகுறி ஏற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இந்த 119 பேருடன் தொடர்புடைய குடும்பத்தினர், நண்பர்கள் என கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்கள் 119 பேரும் எப்படி ஊருக்கு வந்தார்கள் என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+