'சோசியல் இன்ஜினியரிங்..' பீகாரை வெல்ல பாஜக செய்த சம்பவம்! மூத்த பத்திரிகையாளர் விளக்கம்
சென்னை: பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. வாக்கு திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் வைத்திருந்தாலும், அது இந்தியா கூட்டணிக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. பாஜகவின் இந்த வெற்றிக்கு காரணம் என்ன? என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் சிவப்ரியன் ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறது.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "மகாராஷ்டிராவில் பாஜக எப்படி தனது வாக்குகளை ஒருங்கிணைத்ததோ, அதேபோல பீகாரிலும் பெரிய அளவுக்கு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக எப்படி இவ்வளவு வாக்குகளை வாங்கியது என்பதில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதெல்லாம் இரண்டாம்பட்சம். இந்த விமர்சனங்களை கடந்து, ஓவர் டெக் செய்து தற்போது பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2020இல் வெற்றி பெற்ற தொகுதிகளை காட்டிலும் இப்பொழுது கூடுதலாக 40 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கை.

எடுபடாத எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம்
வாக்கு திருட்டு பற்றியும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பற்றியும் மக்களிடம் எடுத்து பேசி, தமிழ்நாட்டு முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பலரை கொண்டு பிரச்சாரங்கள் செய்த போதிலும் கூட பாஜகவின் வெற்றியை தடுக்க முடியவில்லை.
பீகாரில் பாஜக வெற்றிக்கு பெரிதும் உதவியது நலத்திட்டங்கள் சார்ந்த அரசியல். தமிழ்நாட்டில்தான் இலவசங்களையும், சலுகைகளையும் பாஜக எதிர்க்கிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் பாஜக அதை ஆதரிக்கிறது, பின்பற்றுகிறது. பாஜகவின் மீது 1008 விமர்சனங்கள் இருந்தாலும், அது இடத்திற்கு ஏற்றார் போல மாறிக்கொண்டு தனது வாக்கு வங்கியை பாதுகாத்துக் கொள்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
இந்தியா கூட்டணி வீழ்ந்தது எப்படி?
கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் தான் பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்கு தேவைப்பட்டார். ஆனால், அதன் பின்னர் பிரசாந்த் கிஷோரிடம் இருந்து கற்றுக் கொண்ட அனைத்து வித்தைகளையும் பாஜக களத்தில் இறக்கி இருக்கிறது. தற்போது அமித்ஷா மிகச் சிறந்த வியூக வகுப்பாளராக மாறியிருக்கிறார். பாஜக தலைவர்கள் 24 மணி நேரமும் அடுத்த தேர்தலில் எவ்வாறு ஜெயிப்பது என்பது பற்றிய யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் வெறும் 42 இடங்களில் வென்ற நிதிஷ்குமார், இந்த முறை 80க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார். அப்படியெனில் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்தது என்ன? பாஜகவில் இருந்து விலகி, ஆர்.ஜே.டி உடன் கூட்டணி அமைத்து, இந்தியா கூட்டணியை உருவாக்க முக்கிய பங்கு வகித்த நிதீஷ்குமார், தற்போது அந்த கூட்டணியை வீழ்த்தி இருக்கிறார்.
பாஜகவின் திட்டம்
இந்த தேர்தல் முடிவுகளில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சம் என்னவெனில், பாஜக + நிதிகுமாரின் இணைந்த வளர்ச்சிதான். பாஜக தனி பெரும்பான்மையாக வளரும் என்றும், நிதிஷ்குமார் ஒரம் கட்டப்படுவார் எனவும் பலரும் எதிர்பார்த்து இருந்தனர். நிதீஷ் குமாருக்கு பதிலாக மாநில கட்சிகள் அந்த இடத்திற்கு வரும் என்று கருத்திருந்தனர். மகாராஷ்டிராவில் பாஜக திட்டமிட்டு சிவசேனாவை பலவீனப்படுத்தியதைப் போல பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை பாஜக பலவீனப்படுத்தும் என்று நினைத்திருந்தார்கள். ஆனால், எல்லாம் தலைகீழாக மாறி இருக்கிறது.
இந்த தேர்தலில் பாஜக ஐக்கிய ஜனதா தளத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டு பணியற்றி இருக்கிறது. எனவேதான் இரண்டு கட்சிகள் சேர்ந்து 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி இருக்கின்றன. வழக்கமாக பெண்கள் வாக்குகள் நிதீஷ் குமாருக்கு போகும் ஆனால் இந்த முறை ஆர் ஜே டி யின் வாக்குகளும், காங்கிரசின் வாக்குகளும் சேர்ந்து நிதிஷ்குமாருக்கு போயிருக்கிறது. பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.
அதேபோல நிதிகுமார் மீது ஊழல் இல்லாதவர் என்கிற இமேஜ் இருக்கிறது. அதை பாஜக பெரிதுபடுத்தியிருக்கிறது. அப்பேர்ப்பட்ட நபருடன் நாட்டின் பிரதமர் சேரும்போது விளைவு வெற்றியாக மாறியிருக்கிறது.
இந்தியா கூட்டணி/மகாபந்தன் கூட்டணியின் தவறு
பாஜக எங்கு விட்டுக்கொடுக்க வேண்டுமோ அங்கு விட்டுக்கொடுத்து, எங்கு அடிக்க வேண்டுமோ அங்கு இறங்கி அடித்திருக்கிறது. இதுதான் வெற்றிக்கான காரணம். இத்தனைக்கும் சிராக் பஸ்வானுக்கும் நிதிஷ்குமாருக்கும் ஆகவே ஆகாது. இருப்பினும் அவர்களை பாஜக ஒன்று சேர்த்திருக்கிறது. இதுதான் சோஷியல் இன்ஜினியரிங். இதை செய்ததால்தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இந்தியா கூட்டணியில் இது சாத்தியமில்லாமல் போய்விட்டது.
பீகாரில் கடந்த ஜூன் தொடங்கி ஆகஸ்ட் வரை காங்கிரஸ் ஆக்டிவாக இருந்தது. ஆனால் அதற்கடுத்த மாதங்களில் காங்கிரஸ் களத்தில் இல்லை. மட்டுமல்லாது மகாபந்தன் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் முன்னரே அறிவிக்காமல் விட்டுவிட்டதும் பெரிய தவறு. வாக்காளர் அதிகாரம் யாத்திரையை ராகுல் காந்தி பீகாரில் மேற்கொண்ட போதே, தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார். பீகார் தேர்தல் குறித்து மேலும் பல விஷயங்களை டீயெலாக பேசியிருக்கிறார். மேலும் தெரிந்துக்கொள்ள வீடியோவை பார்க்கவும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications