அரசு பள்ளிகளில் சமூக நீதி பாடல்கள்.. கோரிக்கை வைத்த உதயநிதி.. உடனே ஒகே சொன்ன அன்பில் மகேஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பள்ளிகளில் இனி சமூக நீதி பாடல்கள் ஒலிபரப்ப வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்றுக்கொண்டுள்ளார். விரைவில் இது தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில், காலை இறைவணக்கம் நடைபெறும். பள்ளி துவங்கும் நேரத்திற்கு, மாணவ, மாணவியர் அனைவரும் பள்ளி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பம் முன் கூடுவார்கள். அதன்பிறகு இறைவணக்கம் நடைபெறும். இந்த நிலையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இறைவணக்கம் நிகழ்ச்சி முடிந்ததும் சமூக நீதி பாடல் ஒலிபரப்ப வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை ஒன்றிணைக்கும் வகையிலான 'பள்ளிக்கல்வித்துறை விழுதுகள்' விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிகள்தான் நம்மை உருவாக்குகின்றன.

social-justice-songs-in-govt-schools-regulations-will-come-out-soon-says-minister-anbil-mahesh

நம்மை உருவாக்கிய பள்ளிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பள்ளி கல்வித்துறை சார்பாக விழுதுகள் என்ற சிறந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை மேம்படுத்த 12,300 கோடி ரூபாய் ஒதுக்கி பல்வேறு பணிகளை அரசு செய்து வருகிறது. எனினும் பள்ளி மேம்பாடு உள்ளிட்ட விஷயங்களில் அரசு மட்டும் இல்லை. சமூகத்தின் பங்களிப்பும் அவசியம் என்ற அடிப்படையில் தான் விழுதுகள் போன்ற திட்டத்தை நாம் தொடங்கியிருக்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால் பல ஊர்களில் மாணவர்களே தாமாக முன்வந்து அவர்கள் படித்த பள்ளிகளை மேம்படுத்துகிறார்கள். அதை மேலும் ஸ்டிரீம்லைன் படுத்துவதற்காகத்தான் இந்த திட்டங்களை அரசு கொண்டு வந்து இருக்கிறது. நிறைய இடங்களில் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளிகளுக்கு புது கட்டிடம் கட்டி கொடுத்து இருக்கிறார்கள்.. ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று நிறைய செய்தியை பார்க்கிறோம்.

அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில், அரசுப்பள்ளிகளில் சமூக நீதி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் "விழுதுகள்" நிகழ்வை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட "சமூகநீதி" உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அவர்கள் "இந்த 10 பாடல்கள் தொகுப்பில் சமூகநீதியை வலியுறுத்தும் பாடலை அசெம்பிளி நேரத்தில் பாடிவிட்டு வகுப்புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

சமூகநீதிக் கொள்கையை எப்போதும் அழுத்தமாக வலியுறுத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கிணங்க இனிவரும் காலங்களில் "சமூகநீதி" பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்!" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+