சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னையில் தெரிந்த சூரிய கிரகணம்.. அப்பப்பா.. போட்டோவில் பார்க்கவே கண் கூசுகிறதே.. வாட் ஏ பிரைட்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் சூரிய கிரகணம் தெரிய தொடங்கி பிற்பகல் 2.29 மணிக்கு முடிந்துவிட்டது. புகைப்படத்தில் பார்ப்பதற்கே கண்கள் கூசுவது போல் உள்ளது.

Recommended Video

    நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தே கண்டு ரசிக்க சில ஐடியாக்கள்

    இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் காலை 10 மணிக்கு தொடங்கியது. இது பகல் 12.10 மணிக்கு உச்சத்தை பெற்றது. பின்னர் பிற்பகல் 2.29 மணிக்கு முடிவடைந்தது.

    இந்த கிரகணம் ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தெரியும். இது இந்த ஆண்டின் முதல் கிரகணம் ஆகும். இதற்கு அடுத்த மற்றும் கடைசி கிரகணம் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி தெரியவரும்.

    இந்தியாவில் சூரிய கிரகணம் தொடங்கியது.. மிக நீளமான கிரகணம் இதுவாகும்! இந்தியாவில் சூரிய கிரகணம் தொடங்கியது.. மிக நீளமான கிரகணம் இதுவாகும்!

    கிரகணம்

    கிரகணம்

    இந்த நிலையில் வெளிநாடுகளில் சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு தெரிய தொடங்கிய நிலையில் இந்தியாவில் 9.58 மணிக்கு கிரகணம் தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கிரகணம் தெரிய தொடங்கியது. 6 மணி நேரம் நீடித்த கிரகணம் பிற்பகல் 2.29 மணிக்கு முடிவடைந்தது.

    ஆய்வாளர்கள்

    ஆய்வாளர்கள்

    சென்னையில் சூரிய கிரகணம் தொடங்கியதும் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கும் போதே கண்கள் கூசுகின்றன. இங்கு 34 சதவீதம் மட்டுமே தெரியும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அது போல் திருச்சி, கோவை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியதாக கூறப்படுகிறது.

    பிர்லா கோலரங்கம்

    பிர்லா கோலரங்கம்

    இந்தியாவில் தெரியும் கடைசி சூரிய கிரகணம் இது என சொல்லப்படுகிறது. இத்துடன் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும். 6 மணி நேரம் நீண்ட கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட பிர்லா கோலரங்கம் சிறப்பு ஏற்பாடு செய்ததாக தெரியவில்லை.

    தடை

    தடை

    சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் எந்த கிரகணமாக இருந்தாலும் அதை பொதுமக்கள் காண்பதற்கு பிர்லா பிளேனடோரியம் ஏற்பாடு செய்யும். இதற்காக நிகழ்வு தொடங்குவதற்கு 4 அல்லது 5 மணி நேரங்களுக்கு முன்பேயே மக்கள் வரிசையில் குவிய தொடங்குவர். ஆனால் தற்போது கொரோனா அச்சத்தால் இந்த நிகழ்வுகளை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

    English summary
    Solar Eclipse 2020 starts at Chennai. It is very bright to see even in photos.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X