அது என்ன நிங்கலூ சூரிய கிரகணம்?..ஹைபிரிட் சூரிய கிரகணம் எந்த நாட்டில் தெரியும்..எப்படி பார்க்கலாம்
சென்னை: வானத்தில் ஒரு வேடிக்கை இன்னும் சில நாட்களில் நிகழப்போகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் வியாழக்கிழமை நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் நிங்கலூ கிரகணம் என்று அழைக்கப்படும் ஒரு ஹைபிரிட் சூரிய கிரகணம் ஆகும். இது ஒரு அரிய கிரகண நிகழ்வு என வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை தான் சூரிய கிரகணம் கூறுகின்றனர். இந்த நிகழ்வின்போது, நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. இது வானத்தில் நிகழும் அறிவியல் நிகழ்வாகும்.

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் நிகழும். வரும் வியாழக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி நிகழ உள்ள சூரிய கிரகணமானது நிங்கலூ சூரிய கிரகணம் (Ningaloo solar eclipse) அல்லது ஹைப்ரிட் சூரிய கிரகணம் (hybrid solar eclipse 2023) என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முழு சூரிய கிரகணம் வியாழக்கிழமை காலை 7.04 மணி முதல் பிற்பகல் 12.29 மணி வரை நிகழ உள்ளது. இது இந்தியாவில் தென்படாது என்றாலும், மற்ற நாடுகளில் உள்ள மக்கள் நேரடியாக காணலாம். நிங்கலூ கிரகணம் என்று அழைக்கப்படும் ஹைபிரிட் சூரிய கிரகணம் ஒரு அரிய கிரகண நிகழ்வு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முழு சூரிய கிரகணம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும். அதனால் இந்த கிரகணத்திற்கு ஆஸ்திரேலியாவின் 'நிங்கலூ'கடற்கரை பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை முழுமையாகவோ, பகுதியளவாகவோ கூட பார்க்கமுடியாது. இந்த சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா, கிழக்கு மற்றும் தெற்காசியா, பசிபிக் பெருங்கடல், அண்டார்டிகா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஹைபிரிட் சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.

நிங்காலூ கிரகணம் ஹைபிரிட் சூரிய கிரகணம் உலகின் சில பகுதிகளில் இது வளைய கிரகணமாக தோன்றும் முன், முழு கிரகணமாக மாறும் என்று கூறப்படுகிறது. சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைக்காது, இந்த அரிய வகை கிரகணத்தின்போது, சூரியன் சில நொடிகளுக்கு ஒரு வளையம் போன்ற வடிவத்தில் காட்சி அளிக்கும். அது 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படுகிறது. இதனை கங்கண சூரிய கிரகணம் என்றும் அழைக்கின்றனர்.
இது இந்தியாவில் தென்படாது என்றாலும், நெருப்பு வளையம் ஏற்படும் போது, இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் சில நொடிகள் தெரியும். முழு கிரகணம் எக்ஸ்மவுத், மேற்கு ஆஸ்திரேலியா, திமோர் லெஸ்டே மற்றும் மேற்கு பப்புவா உள்ளிட்ட இடங்களில் மட்டுமே தெளிவாக காண முடியும் என்று space.com இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணத்தின்போது சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பார்ப்பது ஆபத்தானது என நாசா தெரிவித்துள்ளது. சூரிய ஒளியை வடிகட்டும் ஃபில்டர் கண்ணாடிகள். பாதுகாக்கப்பட்ட சோலார் ஃபில்டர் பொருத்தப்படாத, கேமரா லென்ஸ், பைனாகுலர் அல்லது தொலைநோக்கி போன்றவற்றின் மூலம் கிரகணத்தைப் பார்ப்பது கடுமையான கண் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சூரிய ஒளியைப் பார்ப்பதற்கு சிறப்பு கண்ணாடிகளை பயன்படுத்தி பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 14ஆம் தேதி புரட்டாசி 27ஆம் தேதி சனிக்கிழமை இரவு 08.34 மணி முதல் இரவு 02.25 மணி சித்திரை நட்சத்திரத்தில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரியாது. மேற்கு பகுதிகளான வட தென் மத்திய அமெரிக்க பகுதிகள், மெக்ஸிகோ, ஆகிய நாடுகளில் தெரியும்.
அக்டோபர் 28ஆம் தேதி சனிக்கிழமை இரவு 01.03 முதல் இரவு 02.24 வரை ஐப்பசி 11ஆம் தேதி அசுவினி நட்சத்திரத்தில் நிகழும் பகுதி நேர சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும்.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 09.12 மணிக்கு நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. வட அமெரிக்கா, கனடா,நார்வே,ஐஸ்லாந்து,பிரிட்டன், ஸ்பெயின்,போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் இந்த முழு சூரிய கிரகணம் தெரியும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications