சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோபம்.. இப்படி பண்ணா என்ன அர்த்தம்.. அவருக்கே போன் போட்ட ராமதாஸ்..அதுக்கப்பறம் நடந்துதான் டிவிஸ்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாமக தற்போது மிக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறது.. அதிமுக ஒதுக்கிய அனைத்து தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்று பாமக உறுதியாக இருக்கிறது.

அதிமுக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலிலும் சரி.. இந்த சட்டசபை தேர்தலிலும் சரி பாமகவிற்கு தனி இடம் உண்டு. பாமகவிற்கு இருக்கும் வலுவான வன்னியர் வாக்கு வங்கி காரணமாகவும், வட தமிழகத்தில் இருக்கும் செல்வாக்கு காரணமாகவும் அந்த கட்சிக்கு அதிமுக அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு பாமகவும் தொடர்ந்து வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொண்டே உள்ளது. இதனால்தான் இந்த முறை அதிமுக கூட்டணியில் மிக அதிகமாக 23 இடங்களில் பாமக களமிறங்குகிறது.

சிக்கல்

சிக்கல்

பாமக 23 இடங்களில் போட்டியிடும் தொகுதிகளில் சில இடங்களில் மட்டும் அதிமுக சரியாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று புகார் எழுந்தது. அதாவது அதிமுக முன்பு போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் இடங்களில் எல்லாம் சரியாக தேர்தல் பணிகள் நடக்கவில்லை என்று தகவல்கள் வந்தது. தேர்தல் பணிகளை செய்ய அதிமுக நிர்வாகிகள் தயாராக இல்லை என்று கூறப்பட்டது.

பணிகள்

பணிகள்

ஆனால் இங்கு மட்டும் பணிகள் நடப்பது இல்லை. இங்கு நிறைய வன்னியர்கள் இருக்கிறார்கள். ஆனால் வேலைகள்தான் நடப்பது இல்லை என்று பாமக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். நாங்கள் நன்றாக வேலை பார்க்கிறோம். களத்தில் இருக்கிறோம். ஆனால் அதிமுகவினர் வருவது இல்லை என்கிறார்கள் பாமகவினர்.

ராமதாஸ்

ராமதாஸ்

ராமதாஸ் தரப்பும் முதல்வர் பழனிசாமியின் கவனத்திற்கு . இந்த பிரச்சனை குறித்து கொண்டு சென்றுள்ளது. தேர்தல் பணிகள் நடக்கவில்லை.. கொஞ்சம் கவனியுங்கள்.. சில அதிமுக நிர்வாகிகளின் செயலில் நியாயமே இல்லை.. எங்கள் தரப்பு மட்டுமே எல்லா பணிகளையும் செய்கிறது என்று கூறியுள்ளார்.

முடிவு

முடிவு

ராமதாஸ் கொஞ்சம் கோபமாகவே இதை பற்றி குறிப்பிட்டுள்ளாராம். இப்படி செய்தால் வெற்றி பெறுவது கஷ்டம் என்று பாமக தரப்பு அதிமுகவிடம் கூறியுள்ளதாம். ராமதாசை அதிகம் மதிக்கும் அதிமுக தரப்பும் உடனடியாக இந்த புகாரை கேட்டு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. வடமாவட்டத்தில் இருக்கும் சில அதிமுக எம்எல்ஏக்களை உடனே பாமக தொகுதிக்கு முதல்வர் பழனிசாமி அனுப்பி வேலைகளை கவனிக்க சொல்லி இருக்கிறார்.

வேலை

வேலை

முதல்வரே இப்படி நிர்வாகிகளை அனுப்பியதும் உள்ளூர் அதிமுக நிர்வாகிகளும் ஒழுங்காக வேலை செய்ய தொடங்கி உள்ளனராம். ஆனாலும் பாமக யாரையும் நம்பாமல் தமிழகம் முழுக்க இருக்கும் பல ஆயிரம் வன்னியர்களை 23 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை செய்ய களமிறக்கி உள்ளதாம்.

வேலை செய்யட்டும்

வேலை செய்யட்டும்

அதிமுக வேலை செய்யட்டும், செய்யாமல் போகட்டும். இது நம்ம தொகுதி.. நாம்தான் உழைக்க வேண்டும் என்று ராமதாஸ் நம்பிக்கையோடு சொன்னதாக தெரிகிறது. மொத்தத்தில் அதிமுக - பாமக இடையே லேசாக ஏற்பட்ட மனஸ்தாபமும் பெரிதாகாமல் உடனே சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

English summary
Some AIADMK cadres are doing election works in PMK constituencies says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X