தமிழக பாஜகவில் வீச காத்திருக்கும் புயல்.. பரபரப்பில் மாவட்ட தலைகள்
சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் மாவட்ட தலைவர்களின் செயல்பாடு பாஜக தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் சில தினங்களில் மாவட்ட தலைவர்கள் மாற்றப்பட இருப்பதாகவும் சில முக்கிய பிரமுகர்களும் இதில் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் தமிழக பாஜகவினர்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக இந்தியாவில் நடைபெறும் நிலையில் இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இன்னும் மூன்று கட்ட தேர்தல்கள் நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை தேர்தல் நிறைவடைந்து விட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாகவும் ஒரே கட்டமாகவும் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்றது.
தேர்தல் விதிமுறைகள்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அரசு நிகழ்ச்சிகளுக்கும் அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அறிக்கைகள், எக்ஸ் பதிவோடு அவர்கள் தங்கள் வழக்கமான அரசியல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் நிறைவடைந்த உடன் அதிமுக திமுக பாஜக உள்ளிட்ட பல கட்சிகளிலும் அதிருப்தி குரல்கள் எழுந்தன. தேர்தல் முடிவடைந்ததும் அனைத்துக் கட்சி தலைமைகளும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டன.
பட்டியல் தயாரிப்பு: தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றியவர்கள், ஓரளவு பணியாற்றியவர்கள், தலைமையை ஏமாற்றியவர்கள் என பட்டியல் தயாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அதிமுகவை பொறுத்தவரை சென்னை மண்டலத்தில் உள்ள மாவட்ட செயலாளருடன் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றிருக்கிறது. அதில் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் அதிருப்தியில் பேசியதாகவும், கட்சி தலைமைக்கு நிர்வாகிகள் விசுவாசமாக இல்லை, நாடாளுமன்றத் தேர்தலில் செயல்பாடுகள் மோசமாக இருந்தது, இதனால் வெற்றி பெற வேண்டிய தொகுதிகள் கூட கைவிட்டுப் போனது என பேசியதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜக: இதே போன்ற நிலைமை தான் தமிழக பாஜகவிலும் இருக்கிறது என்கின்றனர் நிர்வாகிகள். கூட்டணி கட்சிகளுடன் ஒத்துழைக்காதது, உட்கட்சி அரசியல், செலவுக்கு கொடுத்த பணத்தை செலவு செய்யாதது, பூத் ஏஜெண்டுகளுக்கு முறையாக பணத்தை பிரித்துக் கொடுக்காதது என பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதை அந்த தலைமை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக பணம் பிரிக்கும் தகராறு திருவாரூரில் நிர்வாகி ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பாஜக மாவட்ட தலைவரே கைதாகி தற்போது சிறையில் உள்ளார்.
மாவட்ட தலைவர்கள்: ஏற்கனவே இதே புகார் எழுந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வரவு செலவு கூட்டம் நடத்தி ஆய்வு செய்து தங்களிடம் அறிக்கையை ஒப்படைக்க வேண்டும் என டெல்லி தலைமை உத்தரவிட்டிருந்தது. இதை அடுத்து பல மாவட்டங்களில் வரவு செலவு கூட்டம் நடத்தப்பட்டு அறிக்கையை தலைமைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அறிக்கைக்கும் செலவு செய்த பணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை உணர்ந்த தலைமை மாநில தலைமைக்கு அறிக்கை கொடுத்ததாக தற்போதைய தகவலானது இருக்கிறது. இதன் காரணமாக தேர்தலில் ஒழுங்காக பணியாற்றாத நிர்வாகிகள் கட்சியுடன் மோதல் போக்கை மேற்கொண்ட நிர்வாகிகள் பணத்தை செலவு செய்யாத நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனடிப்படையில் மாவட்ட தலைவர்கள் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
விரைவில் மாற்றம்: குறிப்பாக தென் மாவட்டங்களில் கூட்டணி கட்சியினர் போட்டியிட்ட தொகுதிகளில் தான் அதிக சிக்கல் இருப்பதை உணர்ந்த பாஜக தலைமை அந்தந்த மாவட்ட தலைவர்களை பதவியில் இருந்து நீக்கவும் புதிய தலைவர்களை நியமனம் செய்யவும் தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் இதனை தெரிந்து கொண்ட மாவட்ட தலைவர்கள் தலைமையை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால் நடவடிக்கை நிச்சயம் இருக்கும் என்கின்றனர் நம்மிடம் பேசிய பாஜக நிர்வாகிகள்.
-
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
நாடியே அடங்கிடுச்சே.. அதிமுக கூட போட்ட டீலா? அண்ணாமலை எங்கே? நயினாரிடம் நறுக்கென்று கேட்ட பியூஸ்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
பியூஸ் கோயல் சொன்ன வார்த்தை.. இறங்கி வந்த அண்ணாமலை.. பாஜக வேட்பாளராக சம்மதம்? என்ன நடந்தது? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி











Click it and Unblock the Notifications