சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்வக்கோளாறாக செய்துவிட்டார்.. வெளிப்படையாக பேசிய இபிஎஸ்.. ஒரே மர்மம்.. யார் அந்த கருப்பு ஆடு?

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இருந்த முக்கியமான திட்டம் ஒன்றை திமுக தரப்பிற்கு ஆர்வ கோளாராக ஒருவர் கசியவிட்டுவிட்டதாக முதல்வர் பழனிச்சாமி பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்... இதற்கு பின் என்ன நடந்தது? ஏன் இது சர்ச்சையாகிறது என்று பார்க்கலாம்?

குடும்ப தலைவிகளை கவர்ந்து பெண்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக இருக்கிறது. இதை முன்னிட்டுதான் ரேஷன் கார்டு உள்ள குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் மாத மாதம் கொடுப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நேற்று பேசிய முதல்வர் பழனிசாமி தேர்தலில் வெற்றிபெற்றால் குடும்ப தலைவிகளுக்கு 1500 ரூபாய் மாத மாதம் கொடுப்போம், அதோடு 6 மாத சிலிண்டர் இலவசம் என்றும் குறிப்பிட்டார். தங்களுடைய திட்டத்தை திமுக காப்பியடித்துவிட்டது என்றும் கூறினார்.

அறிக்கை

அறிக்கை

இது தொடர்பாக நேற்று பேசிய முதல்வர் பழனிச்சாமி, நாங்கள் ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரித்து கொண்டு இருக்கிறோம். 10 நாட்களாக கஷ்டப்பட்டு அறிக்கை தயாரித்துக் கொண்டு இருக்கிறோம். இது எப்படியோ கசிந்துவிட்டது. அறிக்கை கசிந்ததை வைத்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

எங்கள் திட்டம்

எங்கள் திட்டம்

அவர்கள் எங்களின் திட்டத்தைதான் அறிக்கையாக அறிவிக்கிறார்கள். எல்லோரும் ஆர்வ கோளாறு. நல்ல திட்டங்கள் வரும் போது ஆர்வத்தில் சிலர் பேசிவிடுவார்கள்.. மௌனம் காக்க முடியாமல் ஆர்வத்தில் யாரோ இப்படி எதிர்கட்சியிடம் அறிவிக்கிறார்கள்.

தவறு

தவறு

செய்தியாளர்கள் செய்திகளை ஷேர் செய்வது போல இதையும் யாரோ சொல்லிவிடுகிறார்கள். அதிமுகவின் எல்லா திட்டமும் கசிந்துவிடுகிறது என்று சொல்ல மாட்டேன். ஒரு சில திட்டங்களை மட்டும் இப்படி கசிந்த பின் காப்பியடிக்கிறார்கள் என்று முதல்வர் பழனிச்சாமி குறிப்பிட்டு இருக்கிறார்.

வட்டாரம் சொல்வது நின்

வட்டாரம் சொல்வது நின்

முதல்வர் பழனிச்சாமி சொல்வது போல உண்மையில் இந்த உதவித்தொகை திட்டம் அதிமுகவின் அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. ஆனால் இதை யாரோ "தவறுதலாக" கசியவிட்டுவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அறிக்கை உருவாக்குவதில் பங்கு பெற்ற நிர்வாகி ஒருவர்தான் இந்த வேலையை செய்து இருக்க வேண்டும் என்கிறார்கள்.

நெருக்கம்

நெருக்கம்

திமுக நிர்வாகிகளுடன் நட்பாக இருக்கும் ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ இந்த தகவலை கசியவிட்டார். திமுக திட்டமிட்டு இந்த தகவலை கறந்து இருக்கலாம்.. திட்டம் நன்றாக இருப்பதால் இதை தன்னுடைய திட்டமாக திமுக அறிவித்துவிட்டதாக அதிமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகிறது. அதே சமயம் இதெல்லாம் சாதாரண விஷயம்.. ஸ்பெஷல் சம்பவமே இனிதான் காத்து இருக்கு என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள் .

ஸ்பெஷல் சம்பவம்

ஸ்பெஷல் சம்பவம்

தேர்தல் அறிக்கையில்தான் முக்கியமான பல விஷயங்கள் உள்ளது. குடும்ப தலைவிகளுக்கான உதவித்தொகையை போலவே இன்னும் சிறப்பான பல திட்டங்கள் ரெடியாகி இருக்கிறது. நல்லவேளை அந்த தகவல் எல்லாம் திமுக பக்கம் செல்லவில்லை. விரைவில் முழு அறிக்கையை வெளியிடுவோம், என்று கூறுகிறார்கள்.

English summary
Someone has leaked AIADMK plan for home makers to DMK says TN CM Edappadi Palanisamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X