குடும்பத்தகராறில் ஆத்திரம்... மாமியாரை கொலை செய்த மருமகன்... மடிப்பாக்கத்தில் பரபரப்பு
சென்னை : சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், மனைவியைப் பிரிந்த ஆத்திரத்தில், மாமியாரை கத்தியால் குத்தி மருமகன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், எலக்ட்ரீஷியனாக பரிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கீதா என்பவருக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

குடிபோதையில் சண்டை
மது பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம், தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால், கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஆறுமுகம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தால் கணவன் - மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனைவி கீதா கோபித்துக்கொண்டு, தனது குழந்தைகளுடன் மடிப்பாக்கம் காஞ்சி காமாட்சி நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

மாமியாருக்கு கத்திகுத்து
இந்நிலையில், நேற்று மது போதையில் இருந்த ஆறுமுகம், மாமியார் சித்ரா வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். அப்போது வீட்டில் கீதா இல்லை என மாமியார் கூறியதால் ஆத்திரமடைந்த ஆறுமுகம், அவருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து, மாமியார் சித்ராவின் கழுத்தில் குத்தியுள்ளார்.

தடுக்க வந்த மைத்தனருக்கும் குத்து
கத்தியால் குத்தப்பட்டு வலிதாங்க முடியாமல் மாமியார் சத்தம் போட்டால், வீட்டில் இருந்த மைத்தனர் உதயகுமார் ஒடிவந்து ஆறுமுகத்தை தடுக்க முயன்றார். அப்போது, மைத்துனரின் வயிற்றிலும் ஆறுமுகம் கத்தியால் குத்தினார்.

காவல் நிலையத்தில் சரண்
இந்த தகராறில் ஆறுமுகத்திற்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்ட நிலையில், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆறுமுகம் சரணடைந்தார். இதனையடுத்து, காயமடைந்த ஆறுமுகத்தை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போலீசார் சிகிச்சை அளித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பலத்த காயமடைந்த சித்ரா மற்றும் உதயகுமார் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று மதியம் சித்ரா உயிரிழந்தார். உதயகுமார் சிகிச்சையில் உள்ளார் என தெரியவந்தது. பின்னர், இச்சம்பவம் குறித்து ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாய் வீட்டிற்கு வந்த மனைவியை அனுப்பி வைக்காத மாமியாரை, மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications