சூனாபானா s/o சங்கிமங்கி? திருப்பூர் டூ மதுரை இ-பாஸ் சர்ச்சை - நடந்தது என்ன
இ பாஸ் முறையில் கடுமையாக இருந்தாலும் சர்ச்சைதான், எளிமையாக தானியங்கி முறையில் கொடுத்தாலும் சர்ச்சைதான். சூனா பானாவிற்கு இ பாஸ் கொடுத்த விவகாரம் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
சென்னை: வடிவேலு இன்றி அமையாது தமிழ் சினிமா என்றாகி விட்டது. வருத்தப்படாத வாலிபர் சங்கமாக இருக்கட்டும், ஆணியே புடுங்கவேணாம் என்று சொல்லும் நேசமணியாகட்டும் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார் வடிவேலு. இப்போதும் அப்படித்தான் சூனா பானா, சங்கி மங்கி என்று வடிவேலுவின் காமெடி பெயர்களை வைத்தே ஒருவர் இ பாஸ் வாங்கி தமிழ்நாடு முழுவதும் பேச வைத்திருக்கிறார். திருப்பூரில் இருந்து மதுரைக்கு இ பாஸ் வாங்கிய சூனா பானா தான் இப்போதைக்கு ஹாட் டாபிக்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள், மரண நிகழ்வுகளில் பங்கேற்க செல்பவர்கள் இ பாஸ் வாங்கி வெளியூர்களுக்கு கார் மூலம் சென்று வருகின்றனர்.
இ பாஸ் முறையில் புகார் எழுந்ததை அடுத்து அதனை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இ பாஸ் முறையில் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. அதிலும் இப்போது சிக்கல் வந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த சங்கி மங்கியின் மகன் சூனா பானாவிற்கு மதுரைக்கு வர கொடுத்த இ பாஸ்தான் இப்போது வைரலாகி வருகிறது.

இ பாஸ் கொடுத்த மதுரை கலெக்டர்
தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தற்போது, தானியங்கி முறையில் இ பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்வதற்காக ஒரு நபர் இ பாஸ் எடுத்துள்ளார் அதில், தனது பெயர் சூனாபானா எனவும் தந்தையின் பெயர் சங்கி மங்கி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் செல்லும்
வாகனத்தின் எண் TN 01 X 0000 என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் இ பாஸ்
மொபைல் போன் நம்பர்,ஆதார் கார்டு நம்பரும் கொடுத்திருக்கிறார் அந்த நபர். இந்த விவரங்களின் அடிப்படையில் அவருக்கு 23ம் தேதி ஒருநாள் மட்டும் செல்லுபடியாகும் இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த இ பாஸ்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த இ பாஸ் கொடுத்தது மதுரை மாவட்டம்தான். அந்த இ பாஸை ஸ்கேன் செய்து பார்த்தால் அது உண்மையான இ பாஸ்தான் என்று உறுதியாகியுள்ளது.

சூனா பானா இ பாஸ்
தான் செய்தியாளர் என்றும் தானியங்கி முறையில் இ பாஸ் வழங்கப்படுவதால் அதை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்ளை செய்ததாகவும் கூறியுள்ளார் இ பாஸ் எடுத்தவர். திருமணத்திற்கு பலமுறை அப்ளை செய்த போது தனக்கு இ பாஸ் கிடைக்கவில்லை. இப்போது எதுவுமே கேட்கவில்லை என்கிறார் சூனா பானா.

ஏன் இப்படி செய்கிறீர்கள்
இந்த சம்பவத்தினால் இ பாஸ் நடைமுறை மேலும் கடுமையாகி விடுமோ என்று அஞ்சுகிறார் சரவணன். இதுபோல இ பாஸ் அப்ளை செய்து டிரைவர்களின் வாழ்க்கையில் விளையாடாதீங்க என்கிறார். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் தாலியை அடமானம் வைத்து வண்டிக்கு பணம் கட்டுகிறோம் என்று ஆதங்கப்படுகிறார் சுற்றுலா வாகன ஓட்டுனர் சரவணன்.












Click it and Unblock the Notifications