அனுமதி கிடைத்ததும் வருகிறேன்.. வீடியோ காலில் விஜய் சொன்னது உண்மையா? கரூர் போக தடையே இல்லையாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் செல்ல எந்த தடையும் இல்லை.. அவர் தான் செல்லாமல் இருக்கிறார் என்று அரசு தரப்பு தகவல்கள் நம்மிடம் தெரிவித்து உள்ளன.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகி 10 நாட்கள் ஆன நிலையில் அவர்களில் 20 குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் நேற்று மாலை முதல் பேசி ஆறுதல் தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த 20 பேரின் வீடுகளுக்குச் சென்ற தவெக நிர்வாகிகளின் போனில் விஜய் வீடியோ காலில் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தாராம்.

TVK Vijay

இந்த போன் காலில்.. நான் அனுமதி கிடைத்தவுடன் உங்களை வந்து சந்திக்கிறேன். எனக்கு அனுமதி கிடைத்ததும் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் வீட்டிலேயே வந்து சந்திக்கிறேன் என்று விஜய் பேசியதாக கூறப்படுகிறது.

விஜய் வீடியோ

முன்னதாக, கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக தவெக தலைவர் விஜய் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், என் வாழ்க்கையில் இப்படியொரு வலி நிறைந்த சூழலை சந்தித்தது கிடையாது; மனசு முழுக்க வலி மட்டும்தான்; அதற்கு ஒரே காரணம் அவர்கள் என் மேல் வைத்துள்ள அன்பும் பாசமும் தான்; அதற்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களோட வலிகளையும், நிலைமையையும் புரிந்துகொண்டு எங்களுக்காக பேசுன அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.

5 மாவட்டங்களில் நடைபெறாத சம்பவம் கரூரில் மட்டும் எப்படி நடைபெற்றது. மக்களுக்கு எல்லாமே தெரியும், மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்காங்க. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியில் வரும். எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நாங்க பேசிக்கொண்டு இருந்தோம் அதை தாண்டி எதையும் செய்யவில்லை. சிம் சார் எதாவது பழி வாங்க வேண்டிய எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.

விஜய் ஏன் செல்லவில்லை?

ஆனால் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் செல்ல எந்த தடையும் இல்லை.. அவர் தான் செல்லாமல் இருக்கிறார் என்று அரசு தரப்பு தகவல்கள் நம்மிடம் தெரிவித்து உள்ளன. கரூரில் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் மக்கள் பலர் பலியான நிலையில், இதுவரை விஜய் உட்பட தவெக மூத்த நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு செல்லாதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 10 நாட்கள் ஆகியும் விஜய் தவெக நிர்வாகிகள் யாருமே பாதிக்கப்பட்ட குடும்பங்களை கூட பார்க்காதது விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

முக்கியமாக இதில் விஜய் கரூர் செல்ல கூடாது என்று போலீஸ் சொல்லவில்லை. அரசு சொல்லவில்லை. தேவையின்றி இதில் வழக்கு போட்டு அனுமதி கேட்டு கரூர் செல்லப்போவதாக விஜய் தரப்பு சொல்கிறது. ஆனால் விஜய் தரப்பு இன்னும் வழக்கும் தொடுக்கவில்லை. கரூர் செல்லவும் விரும்பவில்லை. இதில் விஜய் வழக்கு தொடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் வழக்கு தொடுக்கப்படவில்லை.

அரசு தரப்பில் நாம் விசாரித்ததில்.. விஜய்க்கு தடை எதுவும் இல்லை. கோர்ட் தடையும் இல்லை. போலீஸ் கட்டுப்பாடும் இல்லை. அவர் போக நினைத்தால் போலீசிடம் பாதுகாப்பிற்கு சொல்லிவிட்டு சென்று இருக்கலாம். இல்லையென்றால் அவர் கட்சி நிர்வாகிகளை அனுப்பி இருக்கலாம். ஆனால் விஜய் இரண்டையும் செய்யவில்லை. ஆனால் அனுமதி கிடைத்தவுடன் நேரில் வந்து பார்க்கிறேன் என்று விஜய் கூறுவது எதோ அரசு தடை போட்டது போல அவர் காட்டிக்கொள்ள முயல்கிறார் என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+