என்னாது "41 சீட்டா".. கிடையாது.. அப்படியே திருப்பி போட்டு அனுப்பிய அதிமுக.. ஷாக்கில் தேமுதிக!
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை சீட்கள் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: "41 சீட் வேண்டும், இல்லையென்றால் தனித்து போட்டி" என்று பிரேமலதா அறிவித்து விட்ட நிலையில், அதிமுகவில் தேமுதிகவுக்கு எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. .. அதேசமயம் தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுகவால் முழுமையாக ஒதுக்க முடியாது என்ற தகவலும் கசிந்து வருகிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு கட்சிகளுக்கும் தங்களுக்கான சீட்கள், தொகுதி ஒதுக்கீடுகளில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இவ்வளவு காலம் அமைதியை கடைப்பிடித்து வந்த தேமுதிகவும் களத்தில் குதித்துவிட்டது.
Recommended Video

நேற்று அக்கட்சியின் கூட்டமும் கோயம்பேடு ஆபீசில் நடந்தது.. சட்டமன்ற தேர்தல், கட்சிப்பணிகள், களப்பணிகள், கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை, பிரச்சார விவரங்கள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

கூட்டம்
அப்போது கூட்டத்தில் பிரேமலதா பேசும்போது, கட்சியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்.. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன... அப்போது மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை தேமுதிக பெற்றது.. அதுபோலவே, இந்த முறை தேர்தலிலும் 41 தொகுதிகளை தரும் கட்சிகளுடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்கும்... இல்லாவிட்டால், தனித்து களமிறங்கும்" என்று திட்டவட்டமாக கூறினார்.

60 சீட்டுகள்
பிரேமலதாவின் இந்த பேச்சுதான் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. காரணம், ஏற்கனவே பாஜக 60 சீட் கேட்டு வருகிறது.. ஆனால் எந்த பதிலையும் அக்கட்சிக்கு சொல்ல முடியவில்லை.. இதற்கு நடுவில் ராமதாஸ், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று இறங்கி வருவதால், பாமக எத்தனை சீட் கேட்க போகிறது என்ற கேள்வியும் உள்ளது.. இதற்கு நடுவில் தேமுதிக 41 சீட் கேட்கவும், அந்த அளவுக்கு சீட் ஒதுக்கீடு சாத்தியமா என்பதே சந்தேகமாக உள்ளதாம்.

விஜயகாந்த்
மற்றொன்று, 2006, 2011 ஆகிய 2 தேர்தல்களில் மட்டும்தான் தேமுதிக வெற்றிவாகையை சூடிய நிலையில், அடுத்தடுத்த தேர்தல்களில் அவ்வளவாக சோபிக்கவில்லை.. அதனால், 41 சீட் என்பது சந்தேகமே.. மற்றொன்று, அன்று விஜயகாந்த் உடல்நலத்துடன் இருந்தார்.. எல்லா இடங்களிலும் ஒற்றை மனிதராக பிரச்சாரத்தை கையில் எடுக்கவும்தான் வெற்றிகள் சாத்தியமானது..

கிளைமாக்ஸ்
ஆனால், நேற்றைய கூட்டத்தில் பிரேமலதா பேசும்போது,"விஜயகாந்த் முன்பு போல் இல்லை என்று வயது மற்றும் உடல் சோர்வு காரணமாக விஜயகாந்த் முன்புபோல இப்போது சுறுசுறுப்பாக இல்லை, ஆனாலும் தேர்தல் பிரசார காலத்தின் "கிளைமாக்ஸில்" பிரசாரம் மேற்கொள்வார்" என்றும் அவரே தெரிவித்திருந்தார். இதையும் அதிமுக கருத்தில் கொண்டு வருகிறது.

சீட் எவ்வளவு?
அதனால் எப்படியும் அதிகபட்சமாக வருகிற தேர்தலில் 15 தொகுதிகளை அதிமுக தேமுதிகவுக்கு ஒதுக்கலாம் என்கின்றனர்... ஆனால் 41 சீட்கள் தந்தாக வேண்டும் என்ற பிடிவாதம் உள்ள நிலையில், தேமுதிக 15 சீட் தந்தால் ஏற்குமா? அல்லது பிரேமலதா சொன்னது போல, தனித்து போட்டியிடுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தனித்து போட்டியா?
ஏற்கனவே விஜயகாந்த் பிறந்த நாள் அன்றும் பிரேமலதா பேசும்போது, சிங்கம் சிங்கிளாகவே போட்டியிடும் என்றார்.. நேற்றும், 41 சீட் தரவில்லையானால், தனித்து போட்டி என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார்.. தொடர்ந்து தனித்து போட்டி என்பதிலேயே தேமுதிக தெளிவாக உள்ளதும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications