"நான்தான் பொதுச்செயலாளர்.. நான்தான் அதிமுக".. பக்கா பிளானுடன் சசிகலா.. பரபரக்கும் சென்னை!

காரில் அதிமுக கொடியை கட்டி கிளம்பி உள்ளார் சசிகலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நான்தான் அதிமுக, நான்தான் பொதுச்செயலாளர்" என்பதில் சசிகலா மிக தீவிரமாக இருப்பதாக அமமுகவினர் தெம்புடன் சொல்கின்றனர்.. அத்துடன், இப்போதே அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் சசிகலாவுடன் போனில் பேசியதாகவும் தகவல்கள் கசிய தொடங்கிவிட்டன.

கிட்டத்தட்ட ஒரு மாத பரபரப்பின் உச்சம் இன்று நடந்து கொண்டிருக்கிறது.. சசிகலா சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.. அவர் வருகை ஒரு பக்கம் இருந்தாலும் என்ன மனநிலையில் அவர் இருக்கிறார்.

இங்கு வந்து என்ன செய்ய போகிறார் என்ற ஆர்வமும் எழுந்தபடியே இருக்கிறது. இதுகுறித்து, அமமுகவின் மிக தீவிரமான நிர்வாகிகளிடம் பேசினோம். உற்சாகத்தின் மிகுதியில் அவர்கள் சொன்னதாவது:

அதிமுக கொடி

அதிமுக கொடி

"அவங்க கிளம்பும்போதே அதிமுக கொடியுடன் கிளம்பி இருக்கிறார்கள்.. இதில் இருந்து என்ன தெரியுது? நான்தான் அதிமுக, நான்தான் பொதுச்செயலாளர் என்பதை அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே சொல்லிவிட்டார். இந்த வாரம் ரெஸ்ட்டில் இருந்தபோதுகூட, கட்சியை பற்றிதான் ஆலோசனை நடத்தி வந்துள்ளார்.. ஏனென்றால் அவங்க என்னைக்கு ஆஸ்பத்திரியில் டிஸ்சார்ஜ் ஆனாங்களோ, அன்னைக்கே அவங்ககிட்ட செல்போன் போயிடுச்சு..

தலைமை

தலைமை

மேல்மட்ட நிர்வாகிகள் சசிகலாவை போனில் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்துவிட்டனர்.. சில விஷயங்களை பேசியதாகவும் தெரிகிறது. ஆனால், இந்த விஷயம் தலைமைக்கும் பறந்துள்ளது.. தலைமையும் அவர்களை விசாரித்து, இனி இப்படி செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாம்.. இவ்வளவு காலம் கீழ்மட்ட நிர்வாகிகளை நீக்கிட்டு இருந்தாங்களே, இனி ஒரு பிரயோஜனமும் இல்லை..

ஜெயில் வாழ்க்கை

ஜெயில் வாழ்க்கை

இவ்வளவு நாள் போன்லதான்.. இனி பாருங்க, வெளிப்படையாகவே நடக்கும். ஜெயிலுக்கு முன்னாடி இருந்த சசிகலா வேறு, இப்போது திரும்பி வரும் சசிகலா வேறு.. கம்பீரமாக இருக்கிறார்.. தெம்பாக இருக்கிறார்.. ஜெயில் வாழ்க்கை அவரை நெஞ்சுரம் கொண்டவராக மாற்றி உள்ளது.. ரொம்ப பொறுமையாக எதையும் அணுகுகிறார்.. காது கொடுத்து பேசுவதை உன்னிப்பாக கவனிக்கிறார்.

Array

Array

இப்படித்தான், அன்னைக்கு ஜெ. அணி, ஜானகி அணி இருந்தபோது எத்தனையோ கஷ்டங்களை தனி ஒருவராக சமாளித்தார் ஜெயலலிதா.. தனியாகவே வெற்றி கொண்டார்.. கிட்டத்தட்ட அப்படித்தான் இன்று சசிகலா நிலைமையும்.. எதிரிகளின் சூழ்ச்சிகளை கண்டறிந்து போராடி அதிமுகவை மீட்டதுபோலவே, சசிகலாவும் மீட்பார்... ஒரேகுடையின் கீழ் தொண்டர்களை திரட்டி ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு திருப்தி செய்வார்.. விரைவில் அதிமுக பொதுக்குழுவையும் கூட்டுவார்.. வெயிட் & சீ" என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+