காற்றழுத்த தாழ்வுநிலையால் தருமபுரி முதல் டெல்டா வரை மழை - வெதர்மேன் சொல்லும் நல்ல செய்தி
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் முதல் நாகை வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜ
சென்னை: காற்றுழுத்த தாழ்வுநிலையால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் முதல் நாகை வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். தெற்கு கன்னியாகுமரி மற்றும் தென் கேரளாவில் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவரது ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை வட இந்தியாவில் விடைபெற்றுவிட்டது. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இன்று சில நாட்களில் தென்மேற்குப் பருவமழை விடைபெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்னதாகவே சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் ஞாயிறன்று கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் அந்தமான் பகுதியை ஒட்டி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று நீலகிரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்றைய தினம் மெரீனா கடற்கரை பகுதியில் 30 முதல் 40 நிமிடத்தில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. இது மேக வெடிப்பு மழை போல உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து தனது மற்றொரு பதிவில், இன்றைய தினம் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் முதல் நாகை வரை புயலின் பாதையில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போல தெற்கு கன்னியாகுமரி மற்றும் தென் கேரளாவில் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவரது ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொட்டித்தீர்த்த மழையால் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. தற்போது சென்னையில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. நடப்பாண்டு பருவமழை புயலோடு தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்












Click it and Unblock the Notifications