கேரளாவில் இடியுடன் அடி வெளுக்கப்போகும் தென்மேற்கு பருவமழை..அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4ஆம் தேதி தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் முடிவுக்கு வந்து பருவமழை காலம் தொடங்க உள்ளது. கேரளாவில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் படிப்படியாக பல மாநிலங்களில் பரவத்தொடங்கும். நடப்பாண்டு பருவமழை இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கேரளாவில் மெதுவாக தொடங்கும் பருவமழை இடியுடன் கனமழையாக வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னதாகவே நடப்பாண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரித்தது. அவ்வப்போது பெய்த மழையால் வெப்பம் தணித்தாலும் பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத்தாண்டி வெப்பநிலை பதிவானது. வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மே மாதத்தில் கோடை மழை பெய்தாலும் மோச்சா புயலின் தாக்கத்தால் வெப்பம் சுட்டெரித்தது. கானல் நீர் ஓடியது. அனல் காற்றில் மக்கள் தவித்து போயினர். வட மாநிலங்களில் வெப்பம் தகித்த நிலையில் கடந்த 2 நாட்களாக தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல ஊர்களில் பலத்த மழை பெய்துள்ளது. சென்னையில் பிற்பகல் வரை சுட்டெரித்த வெயில் மாலைக்கு மேல் ரெஸ்ட் எடுத்தது. கருமேகங்கள் சூழ்ந்து புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
இந்த நிலையில் இந்தியாவில் வெயிலின் தாக்கம் மற்றும் வெப்ப அலைகள் கடந்த 24ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இனி வானில் அவ்வப்போது மேகமூட்டம் ஏற்படும் எனவும், கோடைகாலத்துக்கு முந்தைய மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகின்றன.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான சூழல் நிலவுவதாகவும், தெற்கு வங்கக்கடலின் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்தியாவில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலம். பருவமழை காலம் நெருங்கி விட்டதால், அதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கேரளாவில் பருவமழைக்கு முந்தைய சில ஆரம்ப மழைகள் இருந்தபோதிலும், மாநிலத்தின் பல இடங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை காணப்படுகிறது. இருப்பினும், இம்முறை கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும் போக போக அதிக மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டிற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் பருவமழையாக தென்மேற்கு பருவமழை பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். வழக்கமாக அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் கேராளவில் தொடங்கும். பின்னர் கர்நாடகா, மும்பை, கோவா, கொல்கத்தா என படிப்படியாக பெய்ய தொடங்கும்.
நாடு முழுவதுமே இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்து காணப்படுகிறது. இதனாலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாகவும் கேரளாவில் பருவமழையின் முதல் இரண்டு மாதங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை இயல்பான அளவுக்கு பொழியும். இது தோராயமாக நீண்ட கால சராசரியான 96 சதவிகிதமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இயல்புநிலை அல்லது அதற்கு மேல் மழை பெய்வதற்கு 67 சதவிகிதம் வாய்ப்புள்ளது. வட மேற்கு, வடக்கிழக்குப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை இயல்பு அல்லது அதற்கு மேலான அளவில் பொழியும் என்று இந்திய வானிலை மையத்தின் தலைமை இயக்குநர் மிருதியுஞ்சய் மொகபத்ரா கூறியுள்ளார். ஜூலை மாதத்தில் எல்நினோ நிலைகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலத்தின் இரண்டாம் பாதியில் அவற்றின் தாக்கம் உணரப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 4ஆம் தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும், லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பகுதியிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் மற்றும் நிக்கோ பார் தீவுகள், அந்தமான் கடல் பகுதியிலும் சூறைக்காற்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications