‛டார்க்கெட்டோடு புண்படுத்தாதீங்க’.. விமர்சித்த தலைவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் பரபர பதில்
சென்னை: தென்தமிழக வெள்ள பாதிப்பை சரியாக கணிக்க தவறியதாக கூறி சென்னை வானிலை ஆய்வு மையத்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களும், பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் தான் தவறான தகவலை கூறி பணியாளர்களை புண்படுத்தாதீங்க என சென்னை வானிலை ஆய்வு மையம் பதிலடி கொடுத்துள்ளதோடு வானிலை ஆய்வு மையத்தில் உள்ள தொழில்நுட்பங்களை பட்டியலிட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதன்பிறகு கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தான் மழை அளவு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இஞ்ச் பை இஞ்ச் தகவலை வழங்க வில்லை. மேலும் மழையின் அளவு குறித்து துல்லியமாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை இழுத்து மூடலாம் என கடுமையாக சாடினார். ஆனால் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்தது. மேலும் 3 மணிநேரத்துக்கு ஒருமுறை மழை குறித்த முன்னெச்சரிக்கையை வழங்கியது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் வெள்ள பாதிப்புக்கு காரணம் என தெரிவித்து இருந்தார்.
தற்போது இந்த விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் தந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சமீபமாக, சென்னை வானிலை மையம் நவீனமாக இல்லாமல் இருப்பதாக தவறான விமர்சனங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
இந்திய வானிலை துறையில் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கணினிகள், இஸ்ரோவின் செயற்கைகோள் வசதிகள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை சேகரிப்பான்கள் உலகத்தரத்துக்கு ஒப்பானவை. சென்னை மண்டல வானிலை மையத்திலும் இத்தகைய கருவிகளே பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக சென்னை வானிலையை கண்காணிக்க இரண்டு டாப்ளர் ரேடார்களும், தென்தமிழகத்தை கண்காணிக்க 3 டாப்ளர் ரேடார்களும் பயன்பாட்டில் உள்ளன. இதில் எக்ஸ் பேண்ட் வகை ரேடார் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டதாகும். இந்தியாவில் சிறந்த ரேடார் தொழில்நுட்ப வல்லுநர்கள் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார்கள்.
உலக வானிலை அமைப்பு இந்திய வானிலை ஆய்வு துறையின் கட்டமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கையை உலக தரம் வாய்ந்தது என்று பாராட்டியுள்ளது. வர்தா, கஜா, நிவார், மாண்டோஸ் மற்றும் மிக்ஜாம் புயல்கள் குறித்து வானிலை மையத்தின் எச்சரிக்கைகள் காரணமாக பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்கு பதிலாக சென்னை வானிலை மையத்தை இலக்காக வைத்து செய்யப்படும் விமர்சனங்கள், அர்ப்பணிப்புடன் இயங்கும் தமிழக வானிலை மைய பணியாளர்களை புண்படுத்தும் விதமாகவும், நமது இந்திய தொழில்நுட்பத்தை இழிவுப்படுத்தும் விதமாகவும் உள்ளது. அத்தகைய தவறான விமர்சனங்களை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே?












Click it and Unblock the Notifications