சென்னைக்கு சிறப்பு ரயில்.. கோவை, கன்னியாகுமரி மக்களுக்கு குட் நியூஸ்! அலுங்காம குலுங்காம பயணிக்கலாம்
சென்னை: கன்னியாகுமரி மற்றும் கோவை ரயில் நிலையங்களில் இருந்து இன்று சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, “விடுமுறை நாளை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் கன்னியாகுமரி மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி 4 ஆம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படும்.

கன்னியாகுமரியில் ஞாயிற்றுக் கிழமை இரவு 8. 30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் : 06041) மறுநாள் காலை 9. 45 மணிக்கு சென்னை எழும்பூா் வந்து சேரும். மறு மாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து திங்கள் கிழமை (பிப்ரவரி 5 ஆம் தேதி) பகல் 1 மணிக்கு புறப்படும் ரயில் (எண் : 06042) மறுநாள் அதிகாலை 2. 45 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். இந்த ரயில் நாகா்கோவில், வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இயக்கப்படும்.
இதே போல், கோவையில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இரவு 11. 30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் : 06043) மறுநாள் காலை 8. 20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும். மறு மாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள் கிழமை (பிப்ரவரி 5 ஆம் தேதி) காலை 10. 20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் : 06044) இரவு 8. 25 மணிக்கு கோவை சென்று சேரும்.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியாக இயக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக வார இறுதி நாட்கள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சொந்த ஊர்கள் - சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு இடையே பயணிக்கும் மக்களுக்கு பேருந்துகள், ரயில்களில் இருக்கை கிடைக்காமல் அவதிப்படும் நிலையில் இந்த சிறப்பு ரயில் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications