Special Train: சென்னை டூ திருச்சிக்கு இன்று இரவு முன்பதிவில்லா ரயில்.. பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. டைமிங் இதுதான்!
சென்னை: சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயிலை (special train) தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு நாளை காலை மணிக்கு திருச்சி 7.30க்கு சென்றடையும் என்று தெரிவித்துள்ளது. இதேபோன்று மறுமார்க்கமாக வரும் 17 ஆம் தேதி திருச்சியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரத்தினை ரயில் வந்தடையும் என்று கூறியுள்ளது.
சென்னை பெருநகரங்களில் வசித்து வரும் பலரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான். சிலர் சென்னையில் தங்கி வேலை பார்த்துவிட்டு மாதம் ஒரு முறை அல்லது அதிக விடுமுறை கிடைக்கும் போது சொந்த ஊர் சென்று வருவார்கள். குறிப்பாக வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு அதிகம் பேர் சென்று வருவார்கள்.

சென்னை டூ திருச்சிக்கு சிறப்பு ரயில்
இதை விட பண்டிகை காலம், முகூர்த்த தினங்கள், அரசு விடுமுறை நாட்களில் அதிக பயணிகள் சொந்த ஊர் சென்று திரும்புவார்கள். இதனால் பஸ்கள், ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும். மேலும் பஸ்களில் கட்டணமும் பல மடங்கு உயர்ந்து இருக்கும். சாதாரண வார விடுமுறை நாட்களிலேயே ஆம்னி பஸ்களில் சீட் கிடைக்காது. டிக்கெட் கட்டணமும் பல மடங்கு இருக்கும். தற்போது நாளை சுதந்திர தினமும், நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை மற்றும் வார விடுமுறை என மொத்தமாக 3 நாட்கள் விடுமுறை வருகிறது.
இதனால் பலரும் சொந்த ஊர் சென்று விட்டு திரும்பிவிடலாம் என பஸ்கள், ரயில்களில் டிக்கெட் பதிவு செய்ய முனைப்பு காட்டியதால் விறுவிறுவென புக்கிங் டிக்கெட்டுகள் காலியாகி வருகின்றன. டிக்கெட் கட்டணமும் அதிகம் உள்ளதால் பயணிகள் சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.
மறுமார்க்கத்தில் எப்போது புறப்படும்?
சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத ரயிலாக இந்த ரயில் இயக்கப்படும். சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு நாளை காலை மணிக்கு திருச்சி 7.30க்கு சென்றடையும். இதேபோன்று மறுமார்க்கத்தில் வரும் 17 ஆம் தேதி திருச்சியில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்படும் வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications